»   »  ஒல்லியிடம் இருந்து தயாரிப்பாளரின் கட்டுப்பாட்டில் ஹீரோ: கண்காணிக்க ஜிம் பாய்ஸ்

ஒல்லியிடம் இருந்து தயாரிப்பாளரின் கட்டுப்பாட்டில் ஹீரோ: கண்காணிக்க ஜிம் பாய்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒல்லி நடிகரிடம் இருந்து விலகி வந்த அந்த இளம் ஹீரோ தற்போது ஒரு தயாரிப்பாளரின் கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.

சின்னத் திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்த நடிகர் ஒருவரை ஒல்லி நடிகர் வளர்த்துவிட்டார். பின்னர் அவர்களுக்கு இடையே மனஸ்தாபம் ஏற்பட்டு பிரிந்துவிட்டனர்.

A young hero in producer's custody

நடிகருக்கு ஒல்லியின் கட்டுப்பாட்டில் அவர் சொல்வதை கேட்டு நடக்க விருப்பமில்லை என்று கூறப்பட்டது. இந்நிலையில் நடிகர் தற்போது ஒரு தயாரிப்பாளரின் கட்டுப்பாட்டில் உள்ளார் என்று பேச்சாகக் கிடக்கிறது.

நடிகர் தற்போது நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பில் தயாரிப்பாளர் ஜிம் பாய்ஸ்களை வைத்து அவரை கண்காணிக்கிறாராம். அவர் அனுமதி இல்லாமல் யாரும் நடிகர் அருகில் கூட செல்ல முடியாதாம்.

செட் பக்கம் முக்கியமான நபர்களாக இருந்தாலும் கூட அவர்களை ஜிம் பாய்ஸ் அனுமதிப்பது இல்லையாம். தனக்கு தெரியாமல் யாரும் நடிகரை பார்த்து பேசக் கூடாது என்பதற்காக இந்த ஜிம் பாய்ஸ் ஏற்பாடாம்.

English summary
Buzz is that a young hero is in the custody of a producer. The producer has even appointed bodyguards to monitor the hero.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil