இனிமேல் என்னால் முடியாது, அதுக்கு வேற ஆளை பாருங்க: அதிர வைத்த நடிகை
Recommended Video

என்னால அது கண்டிப்பா முடியாது..!! கண்டிசன் போடும் நடிகை
சென்னை: மகிழ்ச்சியான நடிகை புதுமுக ஹீரோக்களுடன் நடிக்க மாட்டேன் என்று அடம்பிடிக்கிறாராம்.
மகிழ்ச்சி நடிகை நடிக்க வந்து சில ஆண்டுகள் ஆகிவிட்டது. இருப்பினும் அவர் இன்னும் வளர்ந்து வரும் நடிகைகள் பட்டியலில் தான் உள்ளார். இந்நிலையில் அவருக்கும் திருமணமான பெரிய இடத்து வாரிசு நடிகருக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டுள்ளதாக வேறு கிசுகிசுக்கப்படுகிறது.

ஒரு பிரேக் கிடைக்காதா நாமும் முன்னணி நடிகையாக மாட்டோமா என்ற எதிர்பார்ப்பில் உள்ளார் நடிகை. இந்நிலையில் அவர் புதிதாக ஒரு கன்டிஷன் போடுகிறாராம்.
தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம் முதலில் ஹீரோ யார் என்பதை கூறுங்கள் அதன் பிறகு கதையை கேட்கலாம் என்கிறாராம். ஹீரோ புதுமுகம் என்று கூறினால் அப்படியே நடையை கட்டுங்க என்று இயக்குனர்களிடம் கூறுகிறாராம்.
அம்மணி இனி புதுமுக ஹீரோக்களுடன் நடிக்க மாட்டாராம்.
Comments


Click it and Unblock the Notifications