முழு விபரம்

By Staff

விருமாண்டிக்குப் பிறகு புதுப் பட வாய்ப்புக்கள் ஏதும் வராத காரணத்தால் அமெரிக்காவுக்குப் படிக்கப் போகப் போவதாய் கூறிக்கொண்டிருந்த அபிராமிக்கு தமிழில் பிளாட்பார்ம் என்ற சின்ன படம் கிடைத்தது.

இதனால் படிப்பு திட்டத்துக்கு மூட்டை கட்டி வைத்தார். தானே ஒரு படத்தை இயக்கத் திட்டமிட்டு ஸ்கிரிப்ட் எல்லாம் தயார்செய்து கொண்டிருக்கிறர் அபிராமி என்றும் பேசப்பட்டது.

ஆனால், இதற்கெல்லாம் மாறாக அவருக்கு விரைவில் டும் டும் கொட்டிவிட அவரது வீட்டில் திட்டமிட்டுவிட்டார்களாம்.

தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்த இவர் பிறந்து வளர்ந்தது எல்லாமே கேரளம் தான். இதனால் ஒரு மலையாளியையே திருமணம்செய்து கொள்ளும் முடிவில் இருக்கிறார். வீட்டில் தீவிரமாக மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். விரைவிலேயேசெட்டில் ஆகப் போகிறார் அபிராமி.

வெளிநாடோ உள்நாடோ கேரளத்துக்கரராக, நல்ல வசதி வாய்ப்புள்ளவராக இருக்க வேண்டும் என்பதே சின்ன கண்டிசன்.

காக்க.. காக்க புகழ் இயக்குனர் கெளதம் மேனனுடன் அபிராமி கிசுகிசுக்கப்பட்டது நினைவில் இருக்கா?.

அபிராமியின் குடும்பத்தைப் போலவே முகூர்த்த முடிவுக்கு வந்துள்ள இன்னொரு குடும்பம் சங்கவியினுடையது.அவ்வப்போது காதல் கிசுகிசுக்களில் சிக்கிக் கொள்வது சங்கவிக்கு வழக்கமாகிவிட்டது.

பட வாய்ப்புக்களோடு கிசுகிசுக்களும் வந்தால் பரவாயில்லை, வீட்டில் சும்மா உட்கார்ந்துள்ள நிலையில் சங்கவிக்கும் ஒருஇயக்குனர்களுக்கும் இடையிலான நட்பு குறித்து கன்னா பின்னாவாக செய்திகள் பரவி வருவதால் அவருக்கு நல்ல இடத்தில்மாப்பிள்ளை பார்த்துவிட்டு கட்டி வைக்க வீட்டில் திட்டமிட்டுள்ளார்களாம்.

முதலில் இயக்குனர் ரமணாவுடன் நட்புடன் சுற்றி வந்த சங்கவி திடீரென அவரை வெட்டி விட்டுவிட்டு வேறு இயக்குனர்ஒருவருக்கு நெருக்கமாகிவிட்டார். இது குறித்த கிசுகிசுக்கள் கோடம்பாக்கத்தில் றெக்கை கட்டி பறக்கும் நிலையில் பெங்களூரில்ஒரு நல்ல கன்னட மாப்பிள்ளையை தேடுகின்றனர் சங்கவியின் வீட்டில்.

அடிப்படையில் மைசூரைச் சேர்ந்தவரான சங்கவிக்கு பெங்களூரில் செட்டிலாகவே ஆசையாம்.

அதே போல கோடம்பாக்கத்தில் ஒரு பாட்டு வாய்ப்புக்காக படியேறி இறங்கியே இளைந்துவிட்ட மாளவிகாவுக்கும் விரைவில்டும் டும் நடக்கலாம் என்கிறார்கள்.

பழைய காதலரான அஜய்க்கு விட்ட தூது நிராகரிக்கப்பட்டுவிட்டதால் (அஜய்யின் அப்பா பெரிய தெலுங்கு சினிமா புரட்யூசர்என்பதை நினைவில் கொள்க), தானே நல்ல மாப்பிள்ளையை பார்க்க ஆரம்பித்துவிட்டார் மாளவிகா.

பெங்களூர், சென்னை, ஹைதராபாத் அல்லது வெளிநாட்டில் வசிக்கும் தென்னகத்தைச் சேர்ந்தவரே மாளவிகாவின் சாய்ஸாம்.வெளிநாட்டில் அவருக்கு நல்ல மாப்பிள்ளை தேடும் வேலையை அவரது நண்பிகள் செய்து கொண்டிருக்கிறார்களாம்.

இவர்கள் இப்படி இருக்க திடீரென சென்னைக்கு வந்து இறங்கி நான் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு வேணும் என்றுகோடம்பாக்கத்தையே மிரட்டி வரும் ரூபிணிக்கு ரகசிய கல்யாணம் ஆகிவிட்டதாகப் பேச்சு பரவியிருக்கிறது.

திடீரென காணாமல் போன ரூபிணி அதே போல திடீரென்றே திரும்பி வந்தார். சத்யராஜ் உள்ளிட்ட தன் சம காலத்து ஆட்களைசந்தித்து வாய்ப்பு கேட்டார். இதில் பெருமாள் சாமி என்ற படத்தில் சத்யராஜுக்கு ஜோடி சேர வாய்ப்பு கிடைத்துவிட்டது.தொடர்ந்து வேறு வாய்ப்புக்களுக்காக வேட்டை நடத்திக் கொண்டிருக்கிறார்.

நான் ஆல்டர்நேட்டிவ் மெடிசின் படிக்க வெளிநாடு போயிட்டு இப்பத்தான் வந்தேன் என்று ரூபிணி சொல்லிக் கொண்டிருக்க,மும்பையில் திருமணம் எல்லாம் முடிந்து, அதுவும் கசந்து தான் மீண்டும் சினிமாவுக்கு வந்திருக்கிறார் என்கின்றனகோடம்பாக்கம் குருவிகள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X