»   »  அபிராமி.. அபிராமி.. அழகுத் தமிழ் பேசி அருமையாக நடித்து வந்த அபிராமி இப்போது எந்த மொழிப் படத்திலும் நடிக்கவில்லை. அவர் எங்கேபோனார் என்றும் தெரியவில்லை. ரகசியமாக கல்யாணம் பண்ணிக் கொண்டு அவர் செட்டில் ஆகிவிட்டதாக ஒரு செய்தி வலம்வருகிறது.கேரளாவைச் சேர்ந்தவராக இருந்தாலும் அச்சு அசல் தமிழ்ப் பெண்ணான அபிராமி, தமிழில் ஒரு ரவுண்டு வந்தார். கலராக இல்லாவிட்டாலும் களையாக இருந்த அபிராமிக்கு பெரிய நடிகர்களுடன் நடிக்க அவ்வளவாக வாய்ப்புகள் வரவில்லை.பிரபு, அர்ஜூன் போன்ற இரண்டாம், மூன்றாம் மட்ட ஹீரோக்களுடன் நடிக்கவே வாய்ப்பு வந்தது.கவர்ச்சி அலையில் கோலிவுட் சிக்கி சீரழிந்து வருவதால் அபிராமி போன்ற கிளாமர் வாகு இல்லாத நடிகைகளுக்கு அதிகவாய்ப்புகள் வராமல் போனதில் ஆச்சரியம் இல்லைதான்.இருந்தாலும் அபிராமிக்கென்று சில படங்கள் கிடைத்து நடித்தும் வந்தார். அப்படி இப்படி என பத்துக்கும் மேற்பட்ட தமிழ்ப்படங்களில் நடித்து முடித்தார்.தமிழில் கிடைத்த அறிமுகத்தால் மலையாளத்திலும், தெலுங்கிலும் நடித்து வந்த அபிராமி இடையில் காதலில் சிக்கினார். காக்ககாக்க பட இயக்குனர் கெளதம் மேனனுக்கும், அபிராமிக்கும் காதல் உண்டானது.காக்க காக்க தெலுங்குப் பதிப்பில் ஜோதிகா ரோலில் முதலில் அபிராமிதான் நடிப்பதாக கூறப்பட்டது. ஆனால், அதில் அபிராமிநடிக்கவில்லை. கெளதமுடன் அபிக்கு மனக்கசப்பு ஏற்பட்டு இருவரும் விலகிவிட்டது தான் அதற்குக் காரணம் என்றார்கள்.இந் நிலையில் தான் கமலுடன் விருமாண்டியில் நடிக்க வாய்ப்பு வந்தது. இந்தப் படம் அபிராமிக்கு மிக நல்ல பெயரை வாங்கிக்கொடுத்தது.நல்ல நடிகையாகவும் அடையாளம் காணப்பட்ட அவர் தனக்கு வந்த பாராட்டுகளால் மகிழ்ந்து போனார். இதனால் தனக்குவாய்ப்புக்கள் குவியப் போவதாக நினைத்து காத்திருந்தார். ஆனால், காத்திருந்து காத்திருந்து வெறும் காத்து தான் வந்தது.வாய்ப்பு ஏதும் வரவில்லை.நொந்து போன அவர் வாய்ப்புக்காக காத்துக் கிடந்து, வெறுத்துப் போய் சொந்த ஊரான திருவனந்தபுரத்துக்கே திரும்பினார். இப்போது அபிராமியை எங்குமே காண முடியவில்லை. தமிழ் மட்டுமல்லாது, தெலுங்கு, மலையாளத்திலும் அவர் எந்தப்படத்திலும் நடிக்கவில்லை. படிப்பதற்காக அவர் வெளிநாட்டுக்குப் போய் விட்டதாக ஒரு தகவல் சொல்கிறது.கேரளாவில் திருமணமாகி செட்டில் ஆகிவிட்டதாகக் கூட ஒரு புரளி கிளம்பியிருக்கிறது.எது உண்மையோ.. அபிராமியே வாய் திறந்தால் தான் உண்டு..

அபிராமி.. அபிராமி.. அழகுத் தமிழ் பேசி அருமையாக நடித்து வந்த அபிராமி இப்போது எந்த மொழிப் படத்திலும் நடிக்கவில்லை. அவர் எங்கேபோனார் என்றும் தெரியவில்லை. ரகசியமாக கல்யாணம் பண்ணிக் கொண்டு அவர் செட்டில் ஆகிவிட்டதாக ஒரு செய்தி வலம்வருகிறது.கேரளாவைச் சேர்ந்தவராக இருந்தாலும் அச்சு அசல் தமிழ்ப் பெண்ணான அபிராமி, தமிழில் ஒரு ரவுண்டு வந்தார். கலராக இல்லாவிட்டாலும் களையாக இருந்த அபிராமிக்கு பெரிய நடிகர்களுடன் நடிக்க அவ்வளவாக வாய்ப்புகள் வரவில்லை.பிரபு, அர்ஜூன் போன்ற இரண்டாம், மூன்றாம் மட்ட ஹீரோக்களுடன் நடிக்கவே வாய்ப்பு வந்தது.கவர்ச்சி அலையில் கோலிவுட் சிக்கி சீரழிந்து வருவதால் அபிராமி போன்ற கிளாமர் வாகு இல்லாத நடிகைகளுக்கு அதிகவாய்ப்புகள் வராமல் போனதில் ஆச்சரியம் இல்லைதான்.இருந்தாலும் அபிராமிக்கென்று சில படங்கள் கிடைத்து நடித்தும் வந்தார். அப்படி இப்படி என பத்துக்கும் மேற்பட்ட தமிழ்ப்படங்களில் நடித்து முடித்தார்.தமிழில் கிடைத்த அறிமுகத்தால் மலையாளத்திலும், தெலுங்கிலும் நடித்து வந்த அபிராமி இடையில் காதலில் சிக்கினார். காக்ககாக்க பட இயக்குனர் கெளதம் மேனனுக்கும், அபிராமிக்கும் காதல் உண்டானது.காக்க காக்க தெலுங்குப் பதிப்பில் ஜோதிகா ரோலில் முதலில் அபிராமிதான் நடிப்பதாக கூறப்பட்டது. ஆனால், அதில் அபிராமிநடிக்கவில்லை. கெளதமுடன் அபிக்கு மனக்கசப்பு ஏற்பட்டு இருவரும் விலகிவிட்டது தான் அதற்குக் காரணம் என்றார்கள்.இந் நிலையில் தான் கமலுடன் விருமாண்டியில் நடிக்க வாய்ப்பு வந்தது. இந்தப் படம் அபிராமிக்கு மிக நல்ல பெயரை வாங்கிக்கொடுத்தது.நல்ல நடிகையாகவும் அடையாளம் காணப்பட்ட அவர் தனக்கு வந்த பாராட்டுகளால் மகிழ்ந்து போனார். இதனால் தனக்குவாய்ப்புக்கள் குவியப் போவதாக நினைத்து காத்திருந்தார். ஆனால், காத்திருந்து காத்திருந்து வெறும் காத்து தான் வந்தது.வாய்ப்பு ஏதும் வரவில்லை.நொந்து போன அவர் வாய்ப்புக்காக காத்துக் கிடந்து, வெறுத்துப் போய் சொந்த ஊரான திருவனந்தபுரத்துக்கே திரும்பினார். இப்போது அபிராமியை எங்குமே காண முடியவில்லை. தமிழ் மட்டுமல்லாது, தெலுங்கு, மலையாளத்திலும் அவர் எந்தப்படத்திலும் நடிக்கவில்லை. படிப்பதற்காக அவர் வெளிநாட்டுக்குப் போய் விட்டதாக ஒரு தகவல் சொல்கிறது.கேரளாவில் திருமணமாகி செட்டில் ஆகிவிட்டதாகக் கூட ஒரு புரளி கிளம்பியிருக்கிறது.எது உண்மையோ.. அபிராமியே வாய் திறந்தால் தான் உண்டு..

Posted By:
Subscribe to Oneindia Tamil

அழகுத் தமிழ் பேசி அருமையாக நடித்து வந்த அபிராமி இப்போது எந்த மொழிப் படத்திலும் நடிக்கவில்லை. அவர் எங்கேபோனார் என்றும் தெரியவில்லை. ரகசியமாக கல்யாணம் பண்ணிக் கொண்டு அவர் செட்டில் ஆகிவிட்டதாக ஒரு செய்தி வலம்வருகிறது.

கேரளாவைச் சேர்ந்தவராக இருந்தாலும் அச்சு அசல் தமிழ்ப் பெண்ணான அபிராமி, தமிழில் ஒரு ரவுண்டு வந்தார்.

கலராக இல்லாவிட்டாலும் களையாக இருந்த அபிராமிக்கு பெரிய நடிகர்களுடன் நடிக்க அவ்வளவாக வாய்ப்புகள் வரவில்லை.பிரபு, அர்ஜூன் போன்ற இரண்டாம், மூன்றாம் மட்ட ஹீரோக்களுடன் நடிக்கவே வாய்ப்பு வந்தது.

கவர்ச்சி அலையில் கோலிவுட் சிக்கி சீரழிந்து வருவதால் அபிராமி போன்ற கிளாமர் வாகு இல்லாத நடிகைகளுக்கு அதிகவாய்ப்புகள் வராமல் போனதில் ஆச்சரியம் இல்லைதான்.

இருந்தாலும் அபிராமிக்கென்று சில படங்கள் கிடைத்து நடித்தும் வந்தார். அப்படி இப்படி என பத்துக்கும் மேற்பட்ட தமிழ்ப்படங்களில் நடித்து முடித்தார்.

தமிழில் கிடைத்த அறிமுகத்தால் மலையாளத்திலும், தெலுங்கிலும் நடித்து வந்த அபிராமி இடையில் காதலில் சிக்கினார். காக்ககாக்க பட இயக்குனர் கெளதம் மேனனுக்கும், அபிராமிக்கும் காதல் உண்டானது.

காக்க காக்க தெலுங்குப் பதிப்பில் ஜோதிகா ரோலில் முதலில் அபிராமிதான் நடிப்பதாக கூறப்பட்டது. ஆனால், அதில் அபிராமிநடிக்கவில்லை. கெளதமுடன் அபிக்கு மனக்கசப்பு ஏற்பட்டு இருவரும் விலகிவிட்டது தான் அதற்குக் காரணம் என்றார்கள்.

இந் நிலையில் தான் கமலுடன் விருமாண்டியில் நடிக்க வாய்ப்பு வந்தது. இந்தப் படம் அபிராமிக்கு மிக நல்ல பெயரை வாங்கிக்கொடுத்தது.

நல்ல நடிகையாகவும் அடையாளம் காணப்பட்ட அவர் தனக்கு வந்த பாராட்டுகளால் மகிழ்ந்து போனார். இதனால் தனக்குவாய்ப்புக்கள் குவியப் போவதாக நினைத்து காத்திருந்தார். ஆனால், காத்திருந்து காத்திருந்து வெறும் காத்து தான் வந்தது.வாய்ப்பு ஏதும் வரவில்லை.

நொந்து போன அவர் வாய்ப்புக்காக காத்துக் கிடந்து, வெறுத்துப் போய் சொந்த ஊரான திருவனந்தபுரத்துக்கே திரும்பினார்.

இப்போது அபிராமியை எங்குமே காண முடியவில்லை. தமிழ் மட்டுமல்லாது, தெலுங்கு, மலையாளத்திலும் அவர் எந்தப்படத்திலும் நடிக்கவில்லை. படிப்பதற்காக அவர் வெளிநாட்டுக்குப் போய் விட்டதாக ஒரு தகவல் சொல்கிறது.

கேரளாவில் திருமணமாகி செட்டில் ஆகிவிட்டதாகக் கூட ஒரு புரளி கிளம்பியிருக்கிறது.

எது உண்மையோ.. அபிராமியே வாய் திறந்தால் தான் உண்டு..

Read more about: where is abirami

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil