»   »  நிருபரை மிரட்டிய விரல் வித்தை!

நிருபரை மிரட்டிய விரல் வித்தை!

Subscribe to Oneindia Tamil

தமிழகத்தின் நம்பர் ஒன் தமிழ் நாளிதழின் மூத்த நிருபரை தொலைத்துக் கட்டி விடுவேன் என விரல் வித்தை நடிகர் மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து நடிகர் சங்கத் தலைமையிடம் அந்த நிருபர் புகார் கொடுத்துள்ளாராம்.

சின்னப் புள்ளையாக இருந்தபோதே டாடியைப் போலவே தலையை சிலுப்பிக் கொண்டும், கை, கால்களை பிய்த்து உதறி ஆட்டம் போட்டும் பயமுறுத்தியவர் இந்தகொம்பு நடிகர்.

வளர்ந்து வாலிபத்தை எட்டியதும் தனக்கென தனி பாதை அமைத்துக் கொண்டு தாறுமாறான ஓட்டத்துடன் ஹீரோ நடிகரானார். ஆரம்பத்திலிருந்தே இவரும்,சர்ச்சையும் இரட்டைப் பிறவிகள் போலானார்கள்.

முதலில் திரிஷாவுடன் கிசுகிசுக்கப்பட்டார். கல்யாணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்று கூட செய்திகள் வந்தது. ஆனால் அப்படிக் கிளப்பி விட்டதேசொம்புதான் என்று கூறப்பட்டது.

பிறகு இன்னொரு நடிகையுடன் மிக பரபரப்பாக கிசுகிசுக்கப்பட்டார். இருவரும் இணைந்து நடித்த சகலகலா படத்தின் ஆரம்பத்தில் தொடங்கிய காதல் முடியும் போதுகுண்டக்க மண்டக்க முறிந்து போனது.

காதல் முறிந்ததால் அப்செட் ஆகிப் போன தம்பி, சொம்பு சொம்பாக அப்பாவிடம் புலம்ப, அவரும் அங்கமெல்லாம் குலுங்க போனை எடுத்து, நடிகையைப் பிடித்துவாங்கு வாங்கென்று வாங்க, அம்முனையில் நடிகை பயந்து பீதியாக, உதவிக்கரம் நீட்டியது டோலிவுட்.

ஆந்திராவிலிருந்து அரசியல் தலைகள் தளபதிக்குப் போன் போட்டு, அடங்கா தந்தையை அடக்குக என்று அன்பான வேண்டுகோள் வர, டாடியை போனில் பிடித்துசூடாக டோஸ் விட்டார் தளபதி.

அத்தோடு பிரச்சினை முடிந்தது. ஆனால் மறுபடியும் தம்பி மூலம் மறுபடியும் விவகாரம் முற்றியது. சில நாட்களுக்கு முன்பு தம்பியும், பாப்பாவும் நெருக்கமாக இருக்கும்சில அந்தரங்க போட்டோக்கள் இணைய தளத்தை வலம் வர ஆரம்பித்தது.

இது அவரோட வேலைதான், சின்னப் புத்தி அவருக்கு என்று நடிகை கூப்பாடு போட, மேட்டர் என்ன்னு உள்ளார புகுந்து விசாரித்தபோது பல பகாசுர விஷயங்கள்காதுகளை மொய்க்கின்றன.

இங்கேதான் நம்ம மேட்டர் வருது. தமிழர்கள் மத்தியில் பெரும் பிரபலமாக உள்ள, நம்பர் ஒன் நாளிதழ் ஒன்றில், சமீபத்தில் கேள்வி பதில் பகுதியில், அந்த நடிகையின்புகைப்படங்கள் வெளியாவது குறித்து ஒரு கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

அதற்கு அந்த நாளிதழ் அளித்த பதிலில் அந்தப் பெண்ணின் பாவம் பொல்லாதது என்று கூறியிருந்தனர். இது சொம்புக்கு டென்ஷனைக் கொடுத்து விட்டதாம்.

போனை எடுத்த அவர், சம்பந்தப்பட்ட நிருபரைப் பிடித்து வாங்கு வாங்கென்று வாங்கியுள்ளார். அத்தோடு நிற்காமல், இப்படிய எழுதினால் தொலைத்துக் கட்டிவிடுவேன் என்றும் காரமாக பேசியுள்ளார்.

நீண்ட கால அனுபவம் உடைய அந்த மூத்த நிருபரோ, சின்னப் பையன் நம்மை இப்படிப் பேசிட்டாரே என்று குமைந்து போய் விட்டாராம். பத்திரிக்கை நிர்வாகத்திடம்நடந்ததைச் சொல்லியுள்ளார்.

அவர்கள் இதை டீசண்டாக கையாள முடிவு செய்துள்ளார்களாம். அவர்களுக்கு இருக்கும் பலத்துக்கு தம்பியை அடக்க ஒரு மணி நேரமே போதுமானது. ஆனாலும்அவர்கள் பெரிய மனதோடு இந்த விவகாரத்தை நாகரீகமாக கையாள முடிவெடுத்துள்ளார்களாம்.

இந்த விவகாரத்தை நடிகர் சங்கத் தலைமையிடமும் கூறியிருக்கிறார் அந்த மூத்த நிருபர்.

இதைக் கேட்டு நாட்டாமைக்கு பெரும் அதிர்ச்சியாகப் போய் விட்டதாம். உங்களைப் போயா என்று கடுப்பாகிப் போன அவர், சரி விடுங்க நான் பார்த்துக்குறேன்என்று அமைதிப்படுத்தி, சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தாராம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil