முதல்ல ‘கோணி மூட்டை’ மாதிரி இருக்கற உடம்பைக் குறை.. பிரபல நடிகைக்கு அட்வைஸ் பண்ணிய முன்னணி ஹீரோ!

உடம்பைக் குறைக்கும்படி பிரபல நடிகைக்கு முன்னணி ஹீரோ அறிவுரை கூறியுள்ளாராம்.

By Siva

சென்னை: புதிய படவாய்ப்புகள் பெற, உடம்பைக் குறைத்து அழகாக ஆகும்படி பிரபல நடிகைக்கு அறிவுரை கூறியுள்ளாராம் வெற்றிப்பட நடிகர்.

திறமையான நடிகை எனப் பேர் எடுத்தவர் மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வந்த அந்த ஆறெழுத்து நடிகை. தமிழில் தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள கதையாகத் தேர்வு செய்து தான் நடித்து வருகிறார்.

அழகான முக அமைப்பைக் கொண்டிருக்கும் போதும், நடிகைக்கு பெரும்பாலும் இரண்டாவது நாயகி அல்லது பிளாஷ் பேக்கில் வந்து செல்லும் சின்ன வேடம் போன்றவைதான் தொடர்ந்து அமைந்து வருகிறது. இதனால் பெரும் மனவருத்தத்தில் இருக்கிறாராம் நடிகை. நமக்கு மட்டும் ஏன் முதன்மையான நாயகி வேடம் கிடைக்கவில்லை என ஆதங்கமாம் அவருக்கு.

நடிகையின் ஆதங்கம்:

நடிகையின் ஆதங்கம்:

இதுபற்றி நடனத்தோடு இயக்கம் நடிப்பு என சகலகலா வல்லவனாக வலம் வரும் ஹீரோவிடம் நடிகை புலம்பியுள்ளார். ‘எனக்கென்ன குறைச்சல்? எங்கிட்டே அழகு இல்லையா? இளமை இல்லையா? நான் ஹீரோயினா நடிக்கக்கூடாதா?' என மனதில் இருந்ததை எல்லாம் கொட்டித் தீர்த்துள்ளார்.

ஹீரோ அட்வைஸ்:

ஹீரோ அட்வைஸ்:

நடிகையின் ஆதங்கத்தை பொறுமையாக கேட்ட ஹீரோ, ‘அதெல்லாம் இருக்கு. ஆனா கோணிமூட்டை மாதிரி ஷேப்பே இல்லாம உடம்பை வச்சிருக்கியே. முதல்ல அதை குறைச்சு அழகாக்கு' என அறிவுரை கூறி இருக்கிறார். அதோடு இப்படியே போனால் கூடிய சீக்கிரம் உனக்கு இரண்டாவது நாயகி வேடம் கூட கிடைக்காது. அம்மா, அண்ணி வேடம் தான் என எச்சரித்தும் உள்ளார் ஹீரோ.

நடிகையின் முடிவு:

நடிகையின் முடிவு:

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த நடிகை தற்போது, உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளாராம். இதற்கு முன்னர் உடல் எடையை அதிரடியாகக் குறைத்து அனைவரையும் ஆச்சர்யப் படுத்திய பிரம்மாண்ட பட நடிகையிடம் அவர் டிப்ஸ் கேட்டுள்ளாராம். இனி, அவரது டயட், எக்சர்சைஸை தானும் பின்பற்றி ஒல்லி பெல்லியாக முடிவெடுத்துள்ளார்.

முன்னாடியே செஞ்சிருக்கலாம்:

முன்னாடியே செஞ்சிருக்கலாம்:

இதெல்லாம் கண் கெட்ட பிறகு சூரியநமஸ்காரம். முன்பே தன் உடலைக் குறைத்திருந்தால், தமிழில் ஒரு ரவுண்டு நிச்சயம் அவர் வந்திருப்பார். இப்போது செய்யும் முயற்சியை கொஞ்சம் முன்கூட்டியே செய்திருக்கலாம் என கோடம்பாக்கத்தில் நடிகையைப் பற்றி பேசிக் கொள்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X