மெல்ல மெல்ல பழையபடி சேட்டையை ஆரம்பிக்கும் நடிகர்
Recommended Video

சென்னை: திறமையான நடிகர் ஒருவர் பழையபடி சேட்டை செய்யத் துவங்கியுள்ளார்.
பல திறமைகள் கொண்ட நடிகர் அவர். யார் பேச்சையும் கேட்காமல் ஓவராக ஆட்டம் போட்டதால் மார்க்கெட்டை இழந்தார். அதன் பிறகு அடக்கி வாசிக்கத் துவங்கினார்.
நடிகர் திருந்திவிட்டார் என்று நம்பப்பட்ட நிலையில் மீண்டும் தன் வேலையை காட்டுகிறாராம்.

அடம்
நடிகர் ஒப்பந்தமாகியுள்ள புதிய படத்தில் இளம் நடிகை ஒருவரை ஹீரோயினாக போட இயக்குநர் முடிவு செய்தார். இந்நிலையில் நடிகரோ தனது தோழியை தான் ஹீரோயினாக போட வேண்டும் என்று அடம் பிடிக்கிறாராம்.

இயக்குநர்
நடிகர் சேட்டை செய்வதை நிறுத்திவிட்டார் என்று நம்பி ஒப்பந்தம் செய்த இயக்குநர் தற்போது செய்வது அறியாது உள்ளாராம். ஹீரோயின் தேர்வில் எல்லாம் நான் தலையிட மாட்டேன் என்று கூறிவிட்டு தற்போது அடம்பிடித்துக் கொண்டிருக்கிறார் நடிகர்.

தயாரிப்பு
இந்த படத்திற்கு முந்தைய படத்தில் நடித்தபோது தயாரிப்பு தரப்புடன் நடிகருக்கு பிரச்சனை ஏற்பட்டது. காசு விஷயத்தில் நடிகர் பிரச்சனை செய்யவே தயாரிப்பு தரப்பு கடுப்பாகிவிட்டதாம். இந்த ஆளை ஹீரோவாக போடாதீங்க என்று பிரபல இயக்குநரிடம் சொல்லும் அளவுக்கு பிரச்சனை பெரிதாகிவிட்டது.

மறுபடியும்?
நடிகர் திருந்திவிட்டார் என்று நினைத்து அவருக்கு வாய்ப்பு கொடுத்தவர்கள் தற்போது அவர் செய்யும் செயல்களால் எரிச்சல் அடைந்துள்ளார்களாம். நடிகர் நல்ல பெயர் எடுத்த வேகத்தில் கெட்ட பெயரும் எடுக்கத் துவங்கிவிட்டார்.


Click it and Unblock the Notifications











