ஏற்கனவே நேம் ரொம்ப டேமேஜ் ஆகிடுச்சு.. உஷாரான ஒல்லி நடிகர்.. இயக்குநர் பேச காரணமே இதுதானா?

By Staff

சென்னை: ஒல்லி நடிகரின் நல்ல நடிப்பை நம்பி பல தயாரிப்பாளர்கள் பணத்தை போட்டு வருகின்றனர். ஆனால், சமீபத்தில் வெளியான பக்கத்து ஸ்டேட் படம் அவருக்கு சொந்த ஸ்டேட்டில் சொல்லிக் கொள்ளும்படி ஓடாத நிலையில், இங்கே அந்த நடிகருக்கு டோட்டலாகவே மார்க்கெட் காலி என்கிற பேச்சுக்கள் அடிபட ஆரம்பித்து விட்டன.

நம்பர் நடிகை தான் இதற்கு முக்கிய காரணம் என்றும் அவருக்கு ஆதரவாக நடிகருடன் நடித்த பல நடிகர்கள் நடிகருக்கு எதிராக திரும்பிய நிலையில், தாய்மார்கள் மத்தியிலும் குடும்ப பெண்கள் மத்தியிலும் ஒல்லி நடிகருக்கு கொஞ்சம் கூட நல்ல பெயரே இல்லாத நிலை உருவானது தான் அவர் நல்லா நடித்தும் படம் செல்ஃப் எடுக்கல என்கின்றனர்.

Actor begging Director to talk like his PR for save his image

இப்படி விஷயங்கள் ஓடிக் கொண்டிருக்க, நடிகரை மொத்தமாக முடித்து விட வேண்டும் என்பதற்காக, இயக்குநருடன் பிரச்னை என கிளப்பி விட்டதே நம்பர் நடிகையின் டீம் தான் என கிசுகிசுக்கள் கிளம்பியுள்ளன.

வரிசை கட்டி பல படங்கள்: நடிகருக்கு இருக்கும் அதிகளவிலான கடன் சுமையை தீர்க்க அவர் உஷாராக பல நல்ல நல்ல இயக்குநர்களுக்கு பட வாய்ப்புத் தருகிறேன், கதை ரெடி பண்ணுங்க, தயாரிப்பாளர்களை தேடிப் பிடிங்க என உத்தரவு போட்டதும், இளம் இயக்குநர்கள் அடுத்த நொடியே கையில் இருந்த தயாரிப்பாளர்களை வைத்து நடிகருக்கு அட்வான்ஸ் தொகையை வாங்கிக் கொடுத்துவிட்டு, தேவுடு காத்துக் கொண்டிருக்கின்றனர். தயாரிப்பாளர்களும் அடுத்த படம் நம்ம படம் தான் என இப்போதைக்கு இயக்குநர்களின் பேச்சை மட்டுமே நம்பிக் கொண்டு நடிகருக்கு பணம் கொடுத்துவிட்டு, வட்டி கட்டிக் கொண்டிருக்கின்றனர்.

நேம் ரொம்ப டேமேஜ்: ஏற்கனவே விவாகரத்து சர்ச்சைகளில் நடிகரின் பெயர் அதிகம் அடிபட்டு வரும் நிலையில், குடும்ப ரசிகர்களை கவர முடியாமல் தவித்து வரும் ஒல்லி நடிகருக்கு சமீபத்தில் நம்பர் நடிகை பார்த்த வேலையால் ஒட்டுமொத்த பெயரும் படுமோசமாக கெட்டுப் போய் விட்டதாக கூறுகின்றனர். அதன் காரணமாகவே அடுத்தடுத்த படங்களில் ரொம்பவே ரசிகர்கள் நெஞ்சை நக்கும் படியான கதாபாத்திரங்களை தனக்காக டிசைன் செய்ய சொல்லி வருகிறாராம்.

உஷாரான நடிகர்: சமீபத்தில் வெளியான படம் சொந்த ஸ்டேட்டில் செமத்தியான உதை வாங்கிய நிலையில், இதற்கு மேல், தன்னுடைய பெயர் கொஞ்சம் டேமேஜ் ஆனாலும், இங்கே மார்க்கெட்டை பிடிக்க பல ஆண்டுகள் ஆகிவிடும் என்பதை உணர்ந்துக் கொண்டு தான் நடிகர் இயக்குநரிடம் கெஞ்சி நடிகர் ரொம்ப நல்லவரு, வல்லவரு என நாலு வார்த்தை பேசி பிஆர் போல வேலை செய்ய சொல்லியிருக்கிறார் என்கின்றனர்.

நட்புக்காக: இதுவரை எந்த பிரச்னையானாலும் தலை வணங்காத இயக்குநர் பல வருட நட்புக்காக மட்டுமே அப்படியொரு வீடியோ போட்டதாகவும், ஆனால், அதில் அவருக்கு கொஞ்சம் கூட உடன்பாடு இல்லை என்றும் கூறுகின்றனர். நடிகர் கோடிக் கணக்கில் பில் போட்டால், தன்னால் வேற படமே பண்ணிட முடியும் என்பதையும் அழுத்தம் திருத்தமாக சொல்லிய நிலையில், நடிகருக்கு எதிராக வைக்கப்பட்ட செக்கை பக்காவாக பிளான் பண்ணி முறியடித்திருக்கிறாராம் நடிகர் என்கின்றனர். ஆனால், அவரது அடுத்த படமும் சர்ச்சையில் சிக்கி வரும் நிலையில், அந்த படமும் அம்பேல் ஆனால், பல தயாரிப்பாளர்கள் நடிகரை நெருக்கி விடுவார்கள் என்றும் கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X