பெண் பித்தில் அப்பாவையே விட்டுக்கொடுத்த நடிகர்?.. ஒட்டுமொத்தமாக அடிமையாகிட்டாராம்.. கலக்கத்தில் குடும்பம்

By Staff

சென்னை: பெரிய சர்ச்சைகள் எதிலும் சிக்காமல் இத்தனை வருடங்கள் இருந்த அந்த நடிகர் சமீப காலமாக சர்ச்சைகளின் பிறப்பிடமாக இருக்கிறார். மனைவியை பிரிந்த அவர் இன்னொரு பெண்ணுடன் சுற்றிக்கொண்டிருக்க; இப்போது அந்தப் பெண்ணுக்காக குடும்பத்தையும், பெற்ற அப்பாவையுமே விட்டுக்கொடுக்கும் அளவுக்கு சென்றுவிட்டதாக கோலிவுட்டில் கடந்த சில நாட்களாக கிசுகிசுக்கள் பரவ ஆரம்பித்திருக்கின்றன.

சினிமா பின்னணியுள்ள குடும்பத்திலிருந்து திரைத்துறைக்கு வந்த அந்த நடிகர் யார் வம்புக்கும் செல்லாமல் தான் உண்டு தன்னுடைய வேலை உண்டு என்று இருந்தவர். ஒரு நடிகையின் மூலம் அறிமுகமான பெண்ணை காதலிக்க; வீட்டு சம்மதத்தோடு திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பிறகு பல வருடங்கள் ஒன்றாகவே வாழ்ந்தார்கள் அவர்கள். குழந்தைகளும் பிறந்து வளர்ந்துவிட்டன. சுமூகமாக போய்க்கொண்டிருந்த அவர்களது திருமண வாழ்க்கை அண்மைக்காலமாக சச்சரவுகளை சந்தித்தது.

என்ன காரணம்?: அதாவது நடிகரை அவரது மனைவியும், மாமியாரும் ஒட்டுமொத்தமாக கன்ட்ரோலில் எடுத்திருந்ததாகவும்; அதனை வெளியே சொல்லவும் முடியாமல்; உள்ளே தள்ளவும் முடியாமல் தடுமாறியதாக பேச்சுக்கள் எழ ஆரம்பித்தன. ஆனால் அதுகுறித்து எதுவும் நடிகர் ரியாக்ட் செய்யாமல் இருந்தார். ஒருகட்டத்தில் மனைவியை பிரிவதாக அறிவித்தார். தொடர்ந்து மாமியார், மனைவியின் டார்ச்சர் அதிகரித்ததால்தான் இந்த முடிவை அவர் எடுத்ததாக கூறப்பட்டது.

Actor Chooses Girlfriend Over Family Kollywood Gossip Claims He Even Avoided Visiting His Ailing Father

இன்னொரு பெண்ணுடன் பழக்கம்: மனைவியை பிரிவதாக நடிகர் சொன்னது ஒட்டுமொத்த திரைத்துறைக்கும் ஷாக்கைத்தான் கொடுத்தது. இது ஒருபக்கம் இருக்க் மனைவி, மாமியார் டார்ச்சரால் இந்த விவாகரத்து முடிவுக்கு அவர் வரவில்லை; இன்னொரு பெண்ணுடன் ஏற்பட்ட பழக்கம்; படுக்கை வரை சென்றதால்தான் இந்த முடிவை அவர் எடுத்ததாகவும் கூறினார்கள். ஆனால் அதனை அவர் முதலில் மறுத்துவிட்டு காலப்போக்கில் அந்தப் பெண்ணுடன் ஊர் சுற்ற ஆரம்பித்துவிட்டார்.

எதிர்க்கும் குடும்பம்: நடிகரின் இந்த முடிவுக்கு முதலில் அவரது குடும்பம் கொஞ்சம் ஆதரவு கொடுத்ததாம். ஆனால் அந்தப் பெண்ணின் பின்னணியை விசாரித்தபோது; கண்டிப்பாக நமக்கு ஒத்துவராது; எனவே அவளை விட்டு விலகிவிடு என்று அப்பா, அம்மா, அண்ணன், அண்ணி, அக்கா என ஒட்டுமொத்த குடும்பமும் அட்வைஸ் செய்ததாம். ஆனால் பெண்ணின் மோகத்தில் மூழ்கிவிட்ட நடிகரோ அவர்களது பேச்சை காதிலேயே போட்டுக்கொள்ளவில்லையாம்.

அப்பாவையே விட்ட மகன்: இந்நிலையில் புதிய கிசுகிசு ஒன்று கிளம்பியிருக்கிறது. அதாவது நடிகரின் அப்பாவுக்கு சில நாட்களாக உடல்நிலை சரியில்லையாம். அவரை பார்ப்பதற்காக வருகிறேன் என்று நடிகர் சொல்ல; அந்தப் பெண்ணோடு வந்தால் வர வேண்டாம் என்று குடும்பத்தினர் ஸ்ட்ரிக்ட்டாக சொல்லிவிட்டார்களாம். எப்படியாவது அவர்களை சமாதானப்படுத்தலாம் என்று நினைத்த ஹீரோவுக்கு தோல்வியே கிடைக்க; எனக்கு இந்தப் பெண்ணே போதும் நீங்கள் யாரும் வேண்டாம் என்று சொல்லி அப்பாவை பார்க்கவே செல்லவில்லையாம். அதுமட்டுமின்றி நாங்கள் விரைவில் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறோம். அதற்கும் இஷ்டம் இருந்தால் வாருங்கள் என்று சொல்லிவிட்டாராம்.

More from Filmibeat

Read more about: gossip
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X