நடிகரின் பேச்சைக் கேட்டுக் கொண்டு ஆடும் நடிகை
சென்னை: நடிகர் ஒருவர் தனது காதலியை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளாராம்.
அந்த நடிகரும், திறமையான நடிகையும் காதலிப்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் தாங்கள் பிரிந்துவிட்டது போன்று இருவரும் நடிக்கிறார்களாம். உண்மையில் அவர்கள் ரகசியமாக காதலை வளர்த்துக் கொண்டிருக்கிறார்களாம்.

ஊர் உலகத்திற்கு முன்பு காதல் முறிந்தது போன்று சீன் போட்டாலும் நடிகை அந்த நடிகரின் கட்டுப்பாட்டில் தான் உள்ளாராம். நடிகை எந்த படங்களில் நடிக்க வேண்டும், எவ்வளவு சம்பளம் வாங்க வேண்டும் என்று அனைத்தையும் நடிகர் தான் முடிவு செய்கிறாராம்.
பெரிய இடத்து நடிகரின் படத்தில் நடிகையை ஜோடியாக நடிக்க அழைத்தார்கள். அப்பொழுது நடிகையிடம் ஒரு விரலை காட்டச் சொல்லி சம்பளம் கேட்க வைத்திருக்கிறார் நடிகர்.
உங்களுக்கு அந்த அளவுக்கு மார்க்கெட் இல்லை என்று தயாரிப்பாளர் தெரிவித்திருக்கிறார். அப்படி என்றால் அந்த படத்தில் நடிக்க முடியாது என்று கூறுமாறு நடிகையை தூண்டிவிட்டுள்ளார் நடிகர்.
நடிகையும் கொஞ்சம் கூட சுயமாக சிந்திக்காமல் நடிகர் சொல்லும்படி எல்லாம் நடக்கிறார்.


Click it and Unblock the Notifications











