கோவாவில் நடிகையுடன் ஒரு மாதம் ஜாலி பண்ண நடிகர்.. எல்லா பிரச்சனைக்கும் காரணமே அதுதானா?

By Staff

சென்னை: ஹேண்ட்சமான நடிகர் திடீரென விபரீத முடிவை எடுக்க காரணமே அவருக்கும் இன்னொரு நடிகைக்கும் இடையே இருக்கும் தொடர்பு தான் என கிசுகிசுக்க ஆரம்பித்து விட்டது கோடம்பாக்கம். கவர்ச்சி நடிகையுடன் அந்த நடிகர் இணைந்து நடிக்கும் போதே பலரும் வேண்டாம் என எச்சரித்தும் நடிகர் கேட்கவில்லையாம்.

தொடர்ந்து தோல்விகளை சந்திக்க ஆரம்பித்ததும் அப்செட்டாக இருந்த நடிகருக்கு அந்த நடிகை தான் ஆறுதலாக சில வார்த்தைகளை பேசி டென்ஷனை குறைக்க உதவியிருக்கிறாராம்.

gossip kollywood

அதன் காரணமாகவே சமீப காலமாக குடும்பத்தை விட்டு விலகியே இருந்திருக்கிறார் அந்த நடிகர். நடிகரின் செயலால் அப்செட்டான அவரது மனைவி கேள்வி மேல் கேள்வி கேட்க பிரச்சனை வெடித்து தான் பெரிய பஞ்சாயத்தையே கூட்டி இருப்பதாக ஷாக்கிங் தகவல்கள் கசிந்துள்ளன.

மனைவி மீது சந்தேகம்: இத்தனை ஆண்டுகள் பல்வேறு நடிகைகளுடன் ஒன்றாக இணைந்து நடித்தாலும் பெரிதாக எந்தவொரு கிசுகிசுக்களிலும் சிக்காமல் இருந்து வந்தார் அந்த அழகான ஹேண்டஸம் ஹீரோ. அதே போல நடிகருடன் பாசமாகவும் அன்பாகவும் அதீத காதலுடன் இருந்து வந்த மனைவி சமீப காலமாக நடிகரை கண்டுக் கொள்ளவே இல்லையாம். அங்கே ஏற்பட்ட விரிசல் காரணமாக மனைவியை நடிகர் சந்தேகப்பட ஆரம்பித்து விட்டார் என்கின்றனர்.

தலைக்கு ஏறிய டென்ஷன்: சினிமாவில் தனக்கு அடுத்து வந்த நடிகர்கள் எல்லாம் டாப் நடிகர்களாக மாறி வருகிறார்கள் என்றும் தன்னால் அந்த இடத்தை பிடிக்க முடியவில்லையே என்றும் குடும்பத்திலும் நிம்மதி இல்லை என நடிகர் ரொம்பவே அப்செட் ஆகி விட்டாராம். அடுத்தடுத்து சில பெரிய படங்களையும் நடிகர் தவிர்க்க காரணமே அவருக்கு ஏற்பட்ட டென்ஷன் தான் என்கின்றனர்.

கோவாவில் கூல் பண்ண நடிகை: இந்நிலையில், நடிகரின் நிலைமையை புரிந்துக் கொண்ட நடிகை அவரை ஒரு மாதம் ஜாலி டூருக்கு கொண்டு சென்று கோவாவில் வைத்து அனைத்து விதமான மசாஜ்களும் கொடுத்து அவரை கூல் செய்து மனதளவில் டென்ஷன்களை குறைக்க பெருமளவில் உதவி செய்திருக்கிறார் என்கின்றனர். ஆனால், இந்த விவகாரம் மனைவிக்கு தெரிய வர வீட்டில் மறுபடியும் வில்லங்கம் வெடித்து விட்டது.

தனிமையே இனிமை: இனிமேல் தனிமையாகவே இருந்து விடலாம் என்றும் தனக்கு யாரும் வேண்டாம் என்றும் நடிகர் எடுத்துள்ள முடிவு அவரது குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருப்பதாக கூறுகின்றனர். இந்த பிரச்சனை அவ்வளவு எளிதில் முடியாது என்றும் நடிகரின் மனைவி சும்மா விடமாட்டார் என்றும் பூகம்பத்தை கிளப்புகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X