»   »  இந்த நடிகருக்கு மனைவியை பாராட்ட மனசு இல்லையோ?

இந்த நடிகருக்கு மனைவியை பாராட்ட மனசு இல்லையோ?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மனைவி எழுதிய புத்தகத்தை ஊர், உலகம் எல்லாம் பாராட்டுகின்றபோது அந்த நடிகர் மட்டும் அதை பற்றி கண்டுகொள்ளவே இல்லை.

தயாரிப்பாளர், பாடகர், இயக்குனர், பாடல் ஆசிரியரான அந்த நடிகரின் மனைவி புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். புத்தக வெளியீட்டு விழா மும்பையில் நடந்தது.

புத்தகத்தை படிப்பவர்கள் அதை ஆஹா, ஓஹோ என புகழ்ந்து தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். பிரபலங்களும் கூட புத்தகத்துடன் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.

இதை எல்லாம் பார்த்த அந்த நடிகரின் மனைவி மகிழ்ச்சி பொங்க அனைவருக்கும் நன்றி தெரிவித்து வருகிறார். ஊர், உலகெமல்லாம் அவரின் புத்தகத்தை பாராட்டும்போது அவரின் கணவரான அந்த நடிகர் மட்டும் அதை கண்டுகொள்ளவே இல்லை.

பெயருக்கு கூட மனைவியை பாராட்டி ஒரு ட்வீட் போடவில்லை. ஆனால் தனது புதுப்படத்திற்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு மாஞ்சு மாஞ்சு நன்றி தெரிவித்து ட்வீட் போட்டுள்ளார். ஃபேஸ்புக்கில் கூட மனைவியை பாராட்டு ஒரு போஸ்ட் போடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
While others are appreciating this multi talented woman's new book her actor husband doesn't even care about it.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil