முடியாதுன்னா முடியாது தான்: டிவி சேனலிடம் மல்லுக்கட்டிய நடிகரின் பெற்றோர்?
Recommended Video

சென்னை: பொண்ணு பார்க்கிற நிகழ்ச்சியால் பிக்கப் டிராப் நடிகரும், அவரது பெற்றோரும் வருத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
பிக்கப் டிராப் நடிகருக்கு அவரது பெற்றோர் பெண் பார்த்தனர். ஆனால் அவரை பற்றி அறிந்து பெண் தர மறுக்கிறார்களாம். இந்நிலையில் டிவி நிகழ்ச்சி மூலம் பெண் தேடுகிறார்.
அவரை திருமணம் செய்யும் ஆசையில் அந்த பெண்கள் சிலர் செய்த காரியங்கள் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

போட்டியாளர்கள்
நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள ஒரு பெண் நடிகரை திருமணம் செய்யும் ஆசையில் தனது காதலரை கழற்றிவிட்டுள்ளார். ஒருவர் விவாகரத்தானவர், சிலருக்கு காதல் தோல்வி ஏற்பட்டுள்ளது.

ஏமாற்றம்
தன்னை திருமணம் செய்ய விரும்பி நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள பெண்களின் கடந்த கால வாழ்க்கை பற்றி அறிந்து நடிகர் அதிர்ந்து போயுள்ளாராம்.

உண்மை
உங்களின் கடந்த காலம் பற்றி எனக்கு கவலை இல்லை என்று டிவியில் சிரித்தபடியே சொன்னார் நடிகர். ஆனால் நிஜத்தில் கவலையில் உள்ளாராம். அவர்களின் கடந்த காலம் நடிகரை டார்ச்சர் செய்கிறதாம்.

கோபம்
எங்கள் மகனை பார்த்தால் எப்படி தெரியுது. இந்த மாதிரி பெண்களில் ஒருவரை எங்களின் மகனுக்கு கட்டி வைக்க மாட்டோம் என்று நடிகரின் பெற்றோர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் தெரிவித்துள்ளார்களாம்.


Click it and Unblock the Notifications











