அங்கிள்னு கலாய்: எடையை குறைக்க வெளிநாட்டுக்கு பறந்த ஹீரோ
சென்னை: திறமையான நடிகர் ஒருவர் உடல் எடையை குறைக்க வெளிநாட்டிற்கு சென்றுள்ளார்.
பல திறமைகளை தன் வசம் வைத்திருக்கும் நடிகர் அவர். அண்மை காலமாக செய்யக் கூடாததை எல்லாம் செய்து ஆள் குண்டாகிவிட்டார். பார்ப்பதற்கு அவரின் தந்தையின் சைஸில் உள்ளார்.
அவர் நடிப்பில் அண்மையில் வெளியான படத்தை பார்த்தவர்கள் அவருக்கு பதில் அவர் அப்பாவை கூட நடிக்க வைத்திருக்கலாம் போன்று. இருவரும் ஒரே மாதிரி உள்ளனர் என்று கிண்டல் செய்தார்கள்.

தொப்பை
அந்த படத்தின் செட்டில் எடுத்த புகைப்படங்களிலேயே தொப்பை வெளியே தள்ளிக் கொண்டிருந்தது. ஆனால் அதை பற்றி யாராவது பேசினார் நடிகருக்கு மூக்கிற்கு மேல் கோபம் வந்தது.

உடல் எடை
நடிகர் அங்கிள் மாதிரி ஆகிவிட்டார் என்று பலரும் கலாய்க்கத் துவங்கினர். இந்நிலையில் தான் அவர் தனது உடல் எடையை குறைக்க வெளிநாட்டிற்கு சென்றுள்ளார். திரும்பி வரும்போது முன்பு இருந்தது போன்று ஒல்லியாக வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் வாய்ப்பில்லை ராஜா என்று அவரை பற்றி தெரிந்தவர்கள் கூறுகிறார்கள்.

ஜிம்
நடிகர் முன்பும் கூட ஜிம்முக்கு சென்று புகைப்படம் எடுத்து வெளியிட்டார். அதை பார்த்த அவரின் ரசிகர்கள் பெருமை அடைந்தாலும் மற்றவர்கள் கிண்டல் செய்தார்கள். அது எப்படி ஜிம்முக்கு சென்ற அன்றே தொப்பை குறையும் என்று கலாய்த்தார்கள்.

இயக்குநர்
புதுப்படம் ஒன்றுக்காக தான் நடிகர் தனது எடையை குறைக்கிறாராம். அவர் எடையை குறைக்க முயற்சி செய்வது இது முதல் முறை அல்ல. பேசாமல் அந்த உயர்ந்த நடிகை சென்ற நாட்டிற்கு சென்றால் பலன் கிடைக்குமோ என்னவோ?


Click it and Unblock the Notifications











