மகள் வயது நடிகையோடு சுற்றும் ஆகாச நடிகர்.. வயசாகியும் ஆசை குறையல போல!
சென்னை: இந்த நடிகர் அந்தரத்தில் இருந்து பல்டி அடிப்பதற்கு பெயர் பெற்றவர். உலக சினிமாவிலேயே இந்த நடிகரை மிஞ்சுவதற்கு இந்த விஷயத்தில் யாரும் இல்லை எனக் கூறும் அளவுக்கு இந்த நடிகரின் ஆக்ஷன் காட்சிகள் இருக்கும். நடிகருக்கு 60 வயதாகி மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது. அண்மையில் கூட இவரது படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இப்படி இருக்கையில் இந்த நடிகர் இப்போது காதல் வலையில் விழுந்துள்ளாராம். அதுவும் அவரது மகள் வயதுடைய நடிகையோடு டேட்டிங்கில் இருக்கிறார் என்பதுதான் இப்போது சினிமா உலகில் பேச்சாக உள்ளது.
அதாவது இந்த நடிகர் ஏற்கனவே மூன்று முறை திருமணமாகி விவாகரத்து பெற்றுக் கொண்டவர். இதில் மூன்றாவது திருமணத்தின் போது, முதலில் குழந்தை பெற்றுக் கொண்டு அதன் பின்னர் திருமணம் செய்து கொண்டார். முதல் மனைவியைப் பிரிந்து வாழ்ந்தாலும் முதல் மனைவி இவருக்கு அறிமுகம் செய்து வைத்த மதத்தை இப்போதும் பின்பற்றி வருகிறார். இது எல்லாம் ஒரு புறம் இருக்க, ஒரு மனைவிக்கும் இன்னொரு மனைவிக்கும் இடையிலான காலத்தை காதல் கொண்டு நிரப்பி வந்தவர்தான் இந்த ஆகாச நடிகர்.

காதலில் பட்டியல்: இப்படியான நிலையில் இவரது காதலிகளைப் பட்டியலிட்டால் எப்படியும் 10 முதல் 15 வரை இருப்பார்கள். இந்த பட்டியலும் வெளியில் அப்பட்டமாக தெரிந்த பட்டியல் தானே தவிர, இந்த பட்டியலில் விடுபட்டுப் போன பெயர்களும் எண்ணிக்கையும் அவருக்குத்தான் தெரியும். இப்படி இருக்கும்போது இவர் தனது மூன்றாவது மனைவியைப் பிரிந்த பின்னர், கிட்டத்தட்ட ஐந்து காதலிகளை கடந்துவிட்டார்.
வயசாகியும் ஆசை விடல: அதாவது தனது மனதுக்குப் சரி எனப்பட்ட, பெண்ணுடன் கொஞ்ச நாட்கள் ஆசை தீர சுற்றுவது, அதன் பின்னர் நைசாக அந்த பெண்ணை கழட்டி விட்டுவிட்டு அடுத்த பெண்ணை நோக்கி நகர்ந்து விடுவார். இல்லை என்றால், அவர் சரிப்பட்டு வரமாட்டார் என அந்த பெண் இவரைக் கழட்டி விட்டுவிட்டு வேறு ஒருவரை நோக்கி நகர்ந்து விடுவார். அவரது ஒட்டுமொத்த காதல் கதைகளும் இப்படித்தான் இருக்கின்றன. இப்படியான நிலையில் நடிகர் இப்போது தனது மகள் வயதில் இருக்கின்ற ஒரு நடிகையோடு காதலில் இருக்கிறாராம். இது குறித்து தெரிந்து பலரும், வயசானாலும் நடிகருக்கு ஆசை குறையல போல என கமெண்ட் அடித்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











