நடிகையின் சகோதரியுடன் உல்லாசம்.. ஹோட்டலில் நேரில் பார்த்த சீனியர் நடிகரின் மனைவி?.. பிரச்னைக்கு முதல் புள்ளி

By Staff

சென்னை: ஸ்டார் பட்ட பெயர் கொண்ட நடிகர்களின் வரிசையில் முக்கியமானவர் அவர். சினிமாவில் அவர் என்ட்ரி கொடுத்தபோது ஏகப்பட்ட கஷ்டங்களை சந்தித்த நடிகருக்கு; தலைமை பண்பு கொண்ட இன்னொரு ஹீரோதான் இந்த நடிகருக்கு தேவையான ஸ்பேஸ் கொடுத்து தன்னுடைய படங்களில் நடிக்க வைத்தார். இப்போது குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்துவரும் அந்த சீனியர் தான் வளர்ந்த காலகட்டத்தில் ஒரு நடிகையுடன் கிசுகிசுக்கப்பட்டார்.

வசதியான குடும்பத்தில் பிறந்து; சினிமாவில் எப்படியாவது வெல்ல வேண்டும் என கனவோடு திரைத்துறைக்குள் வந்தார் அந்த ஸ்டார் நடிகர். இங்கே வருவதற்கு முன்பு அவர் ஏகப்பட்ட வேலைகளை செய்தார். அந்த வேலைகள் எல்லாம் அவருக்கு நஷ்டத்தைத்தான் கொடுத்தன. இனியும் சரிப்பட்டு வராது என்று முடிவெடுத்து சினிமாவுக்குள் வந்த அவருக்கு ஆரம்பத்தில் வில்லன் ரோல்களை ஏற்றார்.

வில்லன் டூ ஹீரோ: ஒருகட்டத்தில் நடிகரின் அழகையும் திறமையும் பார்த்த இயக்குநர்கள் அவரை ஹீரோவாக்கி படங்கள் செய்தார்கள். படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தன. இதனால் 90களில் முக்கியமான ஹீரோ என்ற அந்தஸ்துக்கு நகர்ந்துவிட்டார். இதற்கிடையே அவர் ஒரு பெண்ணை திருமணமும் செய்திருந்தார். அவர்களுக்கு பிள்ளைகளும் பிறந்துவிட்டார்கள்.

Gossips in Kollywood that the actor s wife saw him in a hotel room with the actress s sister

நடிகையுடன் காதல்: அப்படிப்பட்ட நிலைமையில்தான் பிரபல நடிகையின் சகோதரியும், ஹீரோயினுமாகிய அம்மணியிடம் விழுந்தார் நடிகர். விடாமல் துரத்தி துரத்தி அந்த நடிகையை தன்னுடைய வலையில் விழ வைத்துவிட்டார் நடிகர். இரண்டு பேரும் ஜோடியாக ஊர் சுற்றுவது, ஒரே வீட்டில் லிவிங் டூ கெதர் என்ற நிலையில்தான் இருந்தார்கள். நடிகரின் முதல் மனைவிக்கும் சினிமாவுக்கும் பெரிதாக சம்பந்தம் இல்லாததால் அவருக்கு கொஞ்ச நாட்கள் இது தெரியாமல் இருந்தது.

நேரில் பார்த்த மனைவி: பல நாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்ற பழமொழிக்கு ஏற்ப; இன்டஸ்ட்ரியில் நடிகரும், நடிகையயும் கூத்து வெளியே தெரியவந்தது. அதுமட்டுமின்றி எங்கும் அது பற்றிய பேச்சாகத்தான் இருந்தது. இந்த பேச்சு நடிகரின் மனைவிக்கும் தெரிந்துவிட்டது. எவ்வளவோ சொல்லி பார்த்து திருத்த முயற்சி செய்தாராம். நடிகரும் தலையை மட்டும் ஆட்டிவிட்டு தன்னுடைய லீலைகளில் பிஸியாக இருந்திருக்கிறார். அப்படிப்பட்ட நேரத்தில்தான் நடிகையை அழைத்துக்கொண்டு ஒரு ஹோட்டலுக்கு சென்று உல்லாசமாக இருந்தாராம். அந்த விஷயம் மனைவியாரின் காதுகளுக்கு செல்ல; நேரடியாக ஹோட்டலுக்கு சென்று கையும் களவுமாக பிடித்துவிட்டாராம்.

பிரச்னையின் முதற்புள்ளி: அவர்களை நேரில் சென்று பிடித்த கையோடு; நடிகையை அறைந்துவிட்டு இனி எப்போதும் உங்களுடன் வாழமாட்டேன் என சொல்லித்தான் விவாகரத்து செய்துவிட்டாராம். நடிகரும் மனைவி போனால் என்ன நடிகை இருக்கிறாரே என்ற மயக்கத்தில் சொக்கி போயிருக்கிறார். ஆனால் தெளிவான நடிகையோ இந்த சீனியர் நடிகருடன் இருந்தால் வாய்ப்பும் இருக்காது வாழ்க்கையும் இருக்காது என தெரிந்து; விலகிவிட்டாராம். ராணியை நம்பி மனைவியை கைவிட்ட கதையாக நடிகர் கொஞ்ச காலம் விரக்தியில் அலைந்தாராம். அந்த சமயத்தில்தான் அவர் இன்னொரு நடிகையை காதலித்து இரண்டாவது திருமணம் செட்டிலாகிவிட்டாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X