மனைவிக்கு தெரியாமல் நடிகையுடன் கும்மாளம் போட்ட ஹீரோ

By Siva

Recommended Video

மனைவிக்கு தெரியாமல் நடிகையுடன் கும்மாளம் போட்ட ஹீரோ - வீடியோ

சென்னை: பெரிய இடத்து நடிகர் ஒருவர் தனது முன்னாள் காதலியுடன் சேர்ந்து கும்மாளம் போட்டுள்ளார்.

பெரிய இடத்து நடிகர் ஒருவர் இளம் நடிகை ஒருவரை காதலித்தார். கட்டினால் இவளை தான் கட்டுவேன் என்று ஒற்றைக் காலில் நின்றார். ஆனால் அந்த காதலியை கைவிட்டு வேறு ஒரு பெண்ணை மணக்க வேண்டிய நிலை வந்துவிட்டது.

இருப்பினும் காதலிக்கு அவர் மீது ஒரு கண் இருந்து கொண்டே இருந்திருக்கிறது.

முன்னாள் காதலி

முன்னாள் காதலி

நடிகர் மனைவி, குடும்பம், படங்கள் என்று அவர் பாட்டுக்கு இருந்தார். இந்நிலையில் தான் அவருக்கு தன் முன்னாள் காதலியுடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஹீரோயின் பெயரை கேட்டதும் அவருடன் எல்லாம் நான் நடிக்க மாட்டேன் என்று ஹீரோ சொல்வார் என்று எதிர்பார்த்தால் அவரோ மகிழ்ச்சி அடைந்தார்.

ஹீரோயின்

ஹீரோயின்

படப்பிடிப்பு துவங்கியது ஹீரோவும் வந்தார், ஹீரோயினும் வந்தார். ஒருவரையொருவர் நேருக்கு நேர் பார்த்தார்கள், கண்கள் கதை பேசின. ஹீரோவுக்கு பழைய நினைப்பு எல்லாம் வந்தது. அந்த நேரம் பார்த்து ஹீரோயின் ஏக்கமாக வேறு பார்க்க ஹீரோவுக்கு ஆசையை அடக்க முடியவில்லை. அவருக்குள் ஆசை தீ எரிந்தபோது படப்பிடிப்புக்காக படக்குழு வெளிநாட்டிற்கு கிளம்பியது.

ஆசை

ஆசை

வெளிநாட்டிற்கு கிளம்பியதும் ஹீரோவுக்கு மகிழ்ச்சியை கட்டுப்படுத்த முடியவில்லை. வெளிநாட்டில் வைத்து முன்னாள் காதலியுடன் ஜாலியாக இருக்க முடிவு செய்தார். படப்பிடிப்பு நடந்த நாட்களில் எல்லாம் ஹீரோ அந்த ஹீரோயினின் ஹோட்டல் அறைக்கு சென்றுள்ளார். தினமும் இரவு இருவரும் அன்பை பரிமாறி கள்ளக்காதலை வளர்த்துள்ளனர்.

ஊர்

ஊர்

படப்பிடிப்பு முடிந்த பிறகும் இருவருக்கும் ஊர் திரும்ப மனம் இல்லை. அதனால் அவர்கள் மட்டும் அங்கேயே தங்கி ஒரு வார காலம் ஆசையை தீர்த்துள்ளனர். ஹீரோ ஊருக்கு கிளம்ப நினைத்தாலும் ஹீரோயின் அவரை விடவே இல்லையாம். இது போன்ற சான்ஸ் அடுத்த எப்பொழுது கிடைக்கும் என்று தெரியாது, ஜாலியாக இருக்கலாம் என்று கூறி ஹீரோவை கட்டிப்போட்டுவிட்டாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X