இன்னும் முன்னாள் காதலியை காதலிக்கும் வாரிசு நடிகர்
சென்னை: வாரிசு நடிகர் ஒருவர் இன்னும் தனது முன்னாள் காதலியின் நினைவாகவே உள்ளாராம்.
வாரிசு நடிகர் ஒருவருக்கும் காதலுக்கும் ஏழாம் பொருத்தமாகவே உள்ளது. அவர் வாழ்வில் காதல் வருவதும் போவதுமாக உள்ளது. அண்மையில் அவரும், நடிகை ஒருவரும் காதலிப்பதாகவும், திருமணம் செய்யப் போவதாகவும் கிசுகிசுக்கப்பட்டது.
இந்நிலையில் அந்த நடிகை வேறு ஒருவருடன் சென்றுவிட்டார்.

நடிகை
கோலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகைக்கு நடிகர் மீது காதல் ஏற்பட்டுள்ளது. அந்த நடிகையின் காதலை ஏற்கப் போவது இல்லை என்ற முடிவோடு இருக்கிறாராம் வாரிசு நடிகர். காரணம் அவர் மனதில் வேறு ஒருவர் இருக்கிறாராம்.

காதல்
வாரிசு நடிகர் தனது முன்னாள் காதலியை இன்னும் காதலிப்பதாக கூறப்படுகிறது. அந்த காதல் பிரிய அவர்கள் இருவரும் காரணம் இல்லையாம். இதை நடிகரே நேரம் கிடைக்கும் போது எல்லாம் தெரிவித்துள்ளார்.

பார்ப்போம்
முன்னாள் காதலியை இந்நாள் காதலியாக்கும் ஆசையில் உள்ளாராம் நடிகர். ஆனால் அதற்கு அந்த முன்னாள் காதலி ஒப்புக் கொள்வாரா என்பது தெரியவில்லை. அண்மையில் முன்னாள் காதலி போன் செய்து ஒரு உதவி கேட்க உடனே செய்துள்ளார் வாரிசு நடிகர்.

கவலை
வாரிசு நடிகருக்கு திருமணம் செய்து வைத்து பேரக்குழந்தைகளை கொஞ்ச ஆசையாக உள்ளனர் பெற்றோர். ஆனால் அவருக்கு திருமணம் கை கூடி வராமல் இருப்பது அவரின் பெற்றோரை கவலை அடைய செய்துள்ளது.


Click it and Unblock the Notifications











