வீணாப் போன வாயால் நாசமாப் போகப் போகிறார்: நடிகரை சபிக்கும் இயக்குநர்கள்
சென்னை: தொன தொனவென்று பேசும் நகைச்சுவை நடிகர் செய்யும் அலும்பு பற்றி தான் கோலிவுட்டில் பரபரப்பாக பேசிக் கொள்கிறார்கள்.
வாய் பேசுவதற்கு பெயர் போனவர் அந்த நகைச்சுவை நடிகர். நகைச்சுவை நடிகர்கள் ஹீரோ அவதாரம் எடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் ஒரு சுபயோக சுபதினத்தில் அவரும் ஹீரோ ஆனார்.
அவர் ஹீரோவாக நடித்த படம் வெற்றி பெற்றது. இதையடுத்து நடிகரை கையிலேயே பிடிக்க முடியவில்லை.

ஹீரோ
சும்மாவே வந்து பாருன்னு வாய் பேசும் நடிகர், தான் ஹீரோ அவதாரம் எடுத்த படம் சக்கப் போடு போட்டதும் ஓவர் குஷியாகிவிட்டார். அந்த குஷியில் என்ன பேசுகிறோம் என்பது தெரியாமலேயே பேசிக் கொண்டிருக்கிறார். அந்த பேச்சே தற்போது அவருக்கு எதிராக திரும்பத் துவங்கியுள்ளது என்பதை அவர் எப்பொழுது உணரப் போகிறாரோ?

இயக்குநர்கள்
இயக்குநர்கள் அந்த நடிகரிடம் கதை சொல்ல சென்றால் அவர் கேட்கும் முதல் கேள்வியே இந்த படத்தின் ஹீரோ நான் தானே என்பது தானாம். இல்லை சார் இது ஒரு வெயிட்டான காமெடி கதாபாத்திரம் என்று இயக்குநர்கள் கூறினால் நடிகர் அதை காதில் வாங்காதது போன்று இருக்கிறாராம். இனி நான் நடித்தால் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன். அதனால் இந்த காமெடி பீஸ் கதாபாத்திரம் குறித்து வேறு யாரிடமாவது போய் பேசுங்கள் என்று ஓவராக பேசுகிறாராம் அந்த நடிகர்.

சம்பளம்
அந்த காமெடி நடிகரை ஹீரோவாக வைத்து படம் எடுக்கும் எண்ணத்தில் அவரை சந்திக்க செல்லும் இயக்குநர்களை தெறித்து ஓட விடுகிறாராம். கதை இருக்கட்டும், முதலில் சம்பளம் என்னவென்று கூறுங்கள் என்று கேட்கிறாராம். அடேங்கப்பா, ஒரு படம் ஹீரோவாக நடித்ததற்கே இந்த பில்ட்அப்பா தாங்கலடா சாமி என்று இயக்குநர்கள் ஓட்டம் பிடிக்கிறார்களாம்.

திமிர்
வாயுள்ள பிள்ளை பிழைத்துக் கொள்ளும் என்பார்கள். ஆனால் இந்த பிள்ளை அந்த வீணாப் போன வாயால் தான் நாசமாக போகப் போகிறது என்கிறார்கள் இயக்குநர்கள். இப்படி ஓவராக ஆட்டம் போட்டு காணாமல் போன எத்தனையோ பேரை நாங்கள் பார்த்துள்ளோம். அந்த பட்டியலில் அவர் சேரும் நாள் வெகு தொலைவில் இல்லை என்கிறார்கள் தெறித்து ஓடிய இயக்குநர்கள்.


Click it and Unblock the Notifications











