அந்தாளு திருந்த மாட்டார்னு சொன்னோமே கேட்டீங்களா?: சிரிக்கும் கோடம்பாக்கம்
சென்னை: நடிகர் ஒருவரை பற்றி நாங்கள் சொன்னது தான் நடந்துவிட்டது என்று கூறி கோடம்பாக்கத்தில் சிரிக்கிறார்கள்.
பல திறமை கொண்ட நடிகர் அவர். சிறு வயதிலேயே தனது திறமையால் அனைவரையும் யாருடா இந்த பையன் என்று தன்னை திரும்பி பார்க்க வைத்தார். நல்லா வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் ஏதேதோ வழிமாறி போய்விட்டார்.

சர்ச்சை மேல் சர்ச்சையில் சிக்கிய அவர் சில கெட்டப்பழக்கங்களுக்கும் அடிமையானார். நடிகரின் கெரியர் அவ்வளவு தான் என்று நினைத்த நேரத்தில் திருந்தி அநியாயத்திற்கு நல்ல பிள்ளையாக வந்தார்.
பழைய பன்னீர்செல்வமாக வந்த அவரை வைத்து பெரிய இயக்குநர் ஒரு படத்தை எடுத்தார். அந்த படத்தில் நடித்தபோது நடிகர் தனது வழக்கமான சேட்டைகள் எதையும் செய்யவில்லை. இதை இயக்குநரே பெருமையாக கூற நடிகர் நிஜமாகவே திருந்திவிட்டார் என்று பலர் நம்பிவிட்டார்கள்.
இருப்பினும் நடிகரை பற்றி நன்கு தெரிந்த சிலரோ இது ரொம்ப நாளைக்கு நீடிக்காது, அவர் தனது நிஜ குணத்தை விரைவில் காட்டுவார், கொஞச்ம் வெயிட் பண்ணுங்க என்றார்கள். அவர்கள் பொறாமையில் நடிகரை பற்றி அப்படி பேசுவதாக நினைக்கப்பட்டது. ஆனால் அவர்கள் கூறியது போன்று நடக்கத் துவங்கியுள்ளது.
நடிகரை வைத்து படம் எடுப்பவர்கள் ஒவ்வொருத்தராக கதறத் துவங்கியுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகரை ஆஹா, ஓஹோ என்று புகழ்ந்த தயாரிப்பாளர் ஒருவர் தற்போது தலையில் இடி விழுந்தது போன்று உள்ளார். காரணம் நடிகரின் சேட்டை தான்.
நடிகர் திருந்தவில்லை இதெல்லாம் சும்மா என்று நாங்கள் சொன்னபோது யாராவது கேட்டீங்களா என்று அவரை பற்றி தெரிந்தவர்கள் கூறுகிறார்கள். நடிகருக்கு எதிரி வெளியே இல்லை அவருக்குள்ளேயே உள்ளார்.
அவர் மட்டும் தனது திறமையை நல்லபடியாக பயன்படுத்தினால் நிச்சயம் பெரிய இடத்திற்கு வரலாம். ஆனால் தேவையில்லாத குணத்தால் அவரின் கெரியர் நாசமாகிக் கொண்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications











