கொஞ்சம் ஆட்டமா ஆடுனாரு.. அவருக்கு இமேஜ் டேமேஜானது சரிதான்.. நண்பர்களிடம் துள்ளி குதிக்கும் மணக்கும் நடிகர்..?

By Staff

சென்னை: நடிகருக்கு இமேஜ் டேமேஜ் ஆனதை அடுத்து அதை நண்பர்களிடம் சொல்லி ஜாலி மூடில் இருக்கிறாராம் மணக்கும் நடிகர்.

மிடில் கிளாஸ் குடும்பத்திலிருந்து ரொம்பவே கஷ்டப்பட்டு படிப்படியாக முன்னேறித்தான் பெரிய இடத்துக்கு வந்திருக்கிறார் கடவுள் நடிகர். திரைத்துறைக்குள் வாரிசின் சப்போர்ட்டில் வந்தாலும் தன்னுடைய திறமையால்தான் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருக்கிறார். அவருக்கென்று பலரும் தம்பிகள், தங்கைகளாக இருக்கிறார்கள்.

actor is in a jolly mood after telling his friends about Another hero image damage

தொடர் ஹிட்டுகள்: கடவுள் நடிகர் தொட்டதெல்லாம் ஹிட்டாக ஆரம்பித்ததால் விரைவில் டாப் நடிகர்கள் லிஸ்ட்டில் சரசரவென்று ஏறிவிட்டார். அவர் நடித்த படங்கள் தொடர்ச்சியாக வசூலிலும் சரி விமர்சன ரீதியாகவும் சரி பெரும் வரவேற்பை பெற்றன. இதனால் அடுத்த படத்துக்குக்கூட தன்னுடைய சம்பளத்தை இரண்டு மடங்காக உயர்த்தலாம் என்ற மூடில் அவர் இருப்பதாகவும் ஒரு தகவல் சமீபத்தில் வெளியானது.

நல்ல பையன்: இந்த நடிகருக்கு பலரும் கொடுக்கும் ஒரு சர்ட்டிஃபிக்கேட் என்றால் ச்ச இவர் ரொம்ப நல்ல பையன் ப்பா என்பதுதான். அதற்கேற்றபடிதான் சினிமாவுக்குள் வந்தாலும் பெரிய சர்ச்சையில் எதுவும் சிக்காமல் இருந்தார். அடிப்படையில் ரொம்பவே ஸ்ட்ரிக்ட்டான குடும்பத்தில் வளர்ந்ததால் என்னவோ தனக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லை என்பதையும் அவர் சில பேட்டிகளில் கூறியிருக்கிறார்.

தலைக்கனம்: அதேபோல் அந்த நடிகருக்கு எந்த தலைக்கனமும் இல்லை என்ற கூற்றும் சினிமாவில் உண்டு. ஆனால் தான் வளர்ந்த பிறகு தன்னை வளர்த்துவிட்டவர்களையோ இல்லை தான் சென்ற ப்ளாட்பார்மில் தனக்கு முன்னர் சென்று சினிமாவில் வென்றவர்களையோ அவர் மதிப்பதே இல்லை என்ற குற்றச்சாட்டும் அவ்வப்போது எழுந்தது உண்டு.

முணுமுணுப்பு: ஆனால் நடிகரின் வளர்ச்சியை பார்த்து மிரண்டு போன பலரும் அதுகுறித்து சத்தமாக பேசாமல் தங்களுக்குள்ளேயே முணுமுணுத்துக்கொண்டனராம். அதில் முக்கியமானவர் ஒருகாலத்தில் தமிழ் சினிமாவில் பயங்கரமாக கோலோச்சியிருந்த மணக்கும் நடிகர். அவரும் இந்த நடிகருக்கு முன்னரே நடிகர் வந்த ப்ளாட்பார்மில் வந்து சினிமாவில் சாதித்தவர்.

காண்டும் பொறாமையும்: ஒருகட்டத்தில் அந்த மணக்கும் நடிகர் கடவுள் நடிகரின் வளர்ச்சியை பார்த்து அவரால் முடிகிறது நம்மால் முடியாதா என்று தன்னுடைய கரியரை வேறு ரூட்டுக்கு திருப்பினார். ஆனாலும் கடவுள் நடிகருக்கு வந்த புகழ் போல் இந்த ரூட்டில் மணக்கும் நடிகருக்கு இன்னும் வரவில்லை. இதனால் மணக்கும் நடிகர் கடவுள் நடிகர் மேல் கொஞ்சம் காண்டு கலந்து பொறாமையுடனேதான் இத்தனை வருடங்கள் இருந்தாராம்.

டேமேஜான இமேஜ்: முக்கியமாக மணக்கும் நடிகருக்கு இருந்த பிரச்னையே கடவுள் நடிகருக்கு உருவாகியிருந்த நல்ல பையன் என்ற இமேஜ்தானாம். சூழல் இப்படி இருக்க கடவுள் நடிகரின் இமேஜ் கடந்த சில நாட்களாகவே நாறிக்கொண்டிருக்கிறது. இதனையெல்லாம் கவனித்த மணக்கும் நடிகர் தனது நண்பர்களிடம் விஷயத்தை சொல்லி கொஞ்சம் ஆட்டமா ஆடுனாரு என்று ஜாலி மூடில் துள்ளி குதித்துக்கொண்டிருக்கிறாராம்.

அதுமட்டுமின்றி இந்த இமேஜ் டேமேஜ் ஆனதால் அவருக்கு வாய்ப்புகளும் குறைய ஆரம்பிக்கும். எனக்கு வாய்ப்பு வருதோ இல்லையோ கொஞ்ச காலம் அந்த கடவுள் நடிகர் வருத்தப்பட வேண்டும் என்ற எண்ணத்திலும் மணக்கும் நடிகர் இருப்பதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X