சொல்லச் சொல்ல கேட்காமல் காசை கரியாக்கும் நடிகர்

By Siva

சென்னை: நடிகர் ஒருவர் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை வேறு வழியில் இழந்து கொண்டிருக்கிறார்.

நல்ல திறமையான நடிகர் அவர். பெரிய ஆளான பிறகும் தலைக்கனம் இல்லாமல் உள்ளார். ரசிகர்கள் கொண்டாடும் நடிகர் அவர். அவர் ரசிகர்கள் மீதும், அவர்கள் நடிகர் மீதும் வைத்திருக்கும் பாசம் அனைவருக்கும் தெரியும்.

Actor loses money in production

அந்த பாசக்கார நடிகர் கஷ்டப்பட்டு நடித்து பணம் சம்பாதிக்கிறார். அப்படி சம்பாதிக்கும் பணத்தை வைத்து படம் தயாரிக்கிறார். அவர் தயாரிக்கும் படங்கள் வரவேற்பு பெறாமல் போய்விடுகின்றன.

சில படங்கள் வந்த இடம் தெரியாமல் போய்விட்டது. தயாரிப்பு எல்லாம் வேண்டாம் நடிப்பதோடு நிறுத்திக் கொள் என்று நண்பர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர். ஆனால் இந்த விஷயத்தில் மட்டும் அவர் யார் பேச்சையும் கேட்பதாக இல்லை.

தயாரிப்பு அவருக்கு ராசியாக இல்லை அதனால் தான் போடும் காசெல்லாம் அப்படியே போய்விடுகிறது என்று பேசப்படுகிறது. இந்த நிலைக்கு வர எவ்வளவு கஷ்டப்பட்டோம் என்பது நடிகருக்கும் தெரியும். இருப்பினும் நான் தொடர்ந்து படங்களை தயாரித்தே தீருவேன் என்று அடம் பிடிக்கிறார்.

இதுவரை நீ படங்களை தயாரித்து பணத்தை இழந்தது போதாதா என்று நலம்விரும்பிகள் கேட்பது அவர் காதிலேயே விழுவது இல்லையாம். ஓடியோடி நடித்து சம்பாதிக்கும் காசை படம் தயாரிக்கிறேன் என்று கூறி நாசமாக்கி வருகிறார்.

சொல்லி சொல்லி பார்த்து ஓய்ந்து போனவர்கள் அவர் பணம், அவர் துட்டு, அவர் மணி சொல்ல வேண்டிய கடமைக்கு சொல்லியாச்சு. இனி நன்றாக இருப்பதும் நாசமாக போவதும் அவர் இஷ்டம் என்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X