Don't Miss!
- Finance பெங்களூர் டூ லட்சத்தீவு.. இண்டிகோ-வின் நேரடி விமான சேவை, அடிதூள்.. டிக்கெட் விலை என்ன..?
- Sports ஹர்திக் vs ரோகித் - எங்க அணியில் விரிசல் இல்லை.. வீடியோ வெளியிட்டு சிக்கி கொண்ட மும்பை இந்தியன்ஸ்
- Lifestyle இந்த பிரபல சீரியல் கில்லர்களின் கடைசி வார்த்தைகள் அவங்க பண்ணுன கொலைகளை விட பயத்தை கொடுப்பதாக இருந்ததாம்...!
- News முருகனை அடுத்து மாரியம்மன் வழிபாட்டில் வள்ளிக் கும்மி… காரணம் என்ன?
- Education 5-ம் வகுப்பு வரையிலான வினாத்தாள் நடைமுறை மாற்றம்.!
- Technology லிவ்வின் தம்பதியின் கைவரிசை.. போலி UPI ஆப்ஸ் மூலம் கட்டணம்.. தங்கம் திருடிய ஜோடி மாட்டியது எப்படி?
- Automobiles ரூ.199க்கு கார் கண்ணாடியா!! அதிக உறுதியான பின் பக்கத்தை பார்க்க உதவும் யுனோ மிண்டா-வின் கண்ணாடிகள் அறிமுகம்!
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
ராசி இல்லை: நடிகைக்கு சிபாரிசு செய்வதை நிறுத்திய ஹீரோ
சென்னை: நடிகர் ஒருவர் நடிகை ஒருவரை தன் படங்களுக்கு பரிந்துரை செய்வதை நிறுத்திக் கொண்டுள்ளாராம்.
கஷ்டப்பட்டு வாழ்க்கையில் முன்னுக்கு வந்தவர் அந்த நடிகர். அவரை முன்னுதாரணமாகக் கொண்டு பல இளைஞர்கள் நடிக்கும் ஆசையில் சென்னைக்கு வந்து கொண்டிருக்கிறார்கள்.
நடிகருடன் ஒரு திறமையான நடிகை பல படங்களில் நடித்துவிட்டார். அந்த நடிகையை தனது படங்களில் பரிந்துரை செய்து வந்தார் நடிகர். அதனால் அவருக்கும், நடிகைக்கும் இடையே ஏதோ இருக்கிறது என்று எல்லாம் பேச்சு கிளம்பியது. ஆனால் நடிகர் அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் நடிகைக்கு சிபாரிசு செய்தார். மேடைகளில் நடிகையின் திறமையை பாராட்டி பேசி வந்தார்.
அந்த நடிகையுடன் சேர்ந்து நடித்த படங்கள் எதுவும் ஓடவில்லை. இதை பார்த்த நடிகர் அவர் ராசியில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டார். இதையடுத்து நடிகையை தனது படங்களில் நடிக்க வைக்குமாறு பரிந்துரை செய்வதை நிறுத்திவிட்டார். நடிகர் ஒரு ஹிட் கொடுத்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் நேரத்தில் தான் இந்த காரியத்தை செய்திருக்கிறார்.
'அந்த' வீடியோவை வெளியிட நான் என்ன முட்டாளா?: பிரபல இயக்குநர்
தன் பெயர் கெட்டபோது எல்லாம் செய்யாத ஒரு காரியத்தை ராசிக்காக செய்திருக்கிறார் நடிகர். இவர் மட்டும் அல்ல மற்றொரு முன்னணி நடிகரும் ராசி காரணமாக ஒரு நடிகையை ஒதுக்கி வைத்துள்ளார்.
முன்பெல்லாம் நடிகைகள் தான் ராசி பார்த்தார்கள், தற்போது நடிகர்கள் பார்க்கிறார்கள்.