»   »  அந்த 122 எம்.எல்.ஏ.க்களால் பந்தோபஸ்து இல்லாம தொகுதிக்கு போக முடியுமா?: நடிகர் கிண்டல்

அந்த 122 எம்.எல்.ஏ.க்களால் பந்தோபஸ்து இல்லாம தொகுதிக்கு போக முடியுமா?: நடிகர் கிண்டல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அந்த 122 எம்.எல்.ஏக்களால் போலீஸ் பாதுகாப்பு இல்லாமல் தங்கள் தொகுதிக்கு போக முடியுமா, முடியாது என்று பெரிய இடத்து நடிகர் தெரிவித்துள்ளார்.

பெரிய வீட்டுப் பிள்ளையான அவர் தயாரிப்பாளராக இருந்து ஹீரோவானார். காமெடி படங்கள் அவருக்கு சரியாக உள்ளது. அண்மையில் அவரது தந்தையின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் சென்னையில் நடந்தது.

அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட நடிகர் ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்கள் பற்றி பேசினார். அதாவது, கூவத்தூர் ரிசார்ட்டில் இருந்த 122 எம்.எல்.ஏ.க்களால் போலீஸ் பாதுகாப்பு இல்லாமல் தங்கள் தொகுதிக்கு செல்ல முடியாது என்றார்.

நடிகரின் படங்களுக்கு வரி விலக்கு அளிக்க மாநில அரசு மறுத்ததால் முன்பும் கூட அவர் ஆளுங்கட்சியை விமர்சித்துள்ளார். இந்நிலையில் அவர் எம்.எல்.ஏ.க்களை விமர்சித்துள்ளார்.

தங்கள் தொகுதிக்கு சென்ற ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்கள் சிலர் மக்களால் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
A young actor has said that 122 ADMK MLAs can't even visit their consituency without the help of police or body guards.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil