எல்லோரும் எப்போ விஷேசம்னு கேட்டா எப்டி.. கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறிய நடிகர்!
உறவினர்களின் நச்சரிப்பால் வீட்டை விட்டு வெளியேறி நட்சத்திர ஹோட்டலில் குடியேறி விட்டாராம் பிரபல நடிகர் ஒருவர்.
சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் அனைவரும் திருமண பந்தத்தில் கமிட் ஆகிவிட்டதால், மீதமிருக்கும் ஒரு நடிகரை மட்டும் விடாமல் 'எப்போ விஷேசம்' என துரத்துகிறார்கள் அவரது உறவினர்கள் மற்றும் ரசிகர்கள்.
தற்போது திருமணமாகி இருக்கும், திருமணம் ஆக இருக்கும் நடிகர்களுக்கு எல்லாம் முன்னதாகவே காதலில் விழுந்தவர் இந்த நடிகர். ஒல்லி நடிகரைப் போல் இவரும் குறைந்த வயதிலேயே மனைவி, குழந்தைகள் என செட்டில் ஆகி விடுவார் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் அந்த காதல் தோல்வியில் முடிந்தது.

மீண்டும் நடிகர் காதலில் விழுந்தார். அந்தக் காதலும் தோல்வியிலேயே முடிந்தது. இதனால் நடிகையே வேண்டாம் என்ற முடிவுக்கு வந்தார் நடிகர். இதற்கிடையில் இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மத்தியிலும் நடிகருக்கு நிறைய அவப்பெயர் உண்டானது. எனவே சினிமாவில் மீண்டும் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள நிறையவே மாறினார் அவர்.
தற்போது தான் மீண்டும் தனக்கான இடத்தை அவர் கொஞ்சம் கொஞ்சமாக நிலைநிறுத்தி வருகிறார். இந்தச் சூழ்நிலையில் அவரது உடன்பிறப்புகள் அனைவருக்கும் திருமணம் நடைபெற்றுவிட, வேறென்ன மீண்டும் நடிகரை 'எப்போது விஷேசம்' என்ற கேள்வி துரத்த ஆரம்பித்து விட்டது.
பார்ப்பவர்கள் எல்லாம் நடிகரிடமும், அவரது நட்சத்திர தந்தையிடம் இதே கேள்வியையே கேட்டு எரிச்சல் ஊட்டுகின்றனராம். இதனால் கடுப்பான நடிகர் வீட்டை விட்டு வெளியேறி, தற்போது நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் குடியேறிவிட்டார். அங்கிருந்தபடி தான் பட வேலைகளை அவர் பார்த்துக் கொள்கிறார்.


Click it and Unblock the Notifications











