நடிகருக்கு மூடு இல்லை: பேட்டி எடுக்க வந்தவர்களை திருப்பி அனுப்பிய வாட்ச்மேன்
சென்னை: விலங்குகளின் பின்னால் இருக்கும் உறுப்பின் பெயர் கொண்ட இரண்டு எழுத்து படம் குறித்து பேட்டி எடுக்க சென்ற எஃப்.எம். ரேடியோ நிலைய ஆட்களிடம் நடிகருக்கு மூடு இல்லை என்று அவரது வீட்டு காவலாளி தெரிவித்தாராம்.
விலங்குகளின் பின்னால் இருக்கும் உறுப்பின் பெயர் கொண்ட இரண்டு எழுத்து படம் இழு இழுவென இழுத்து முடியும் தருவாயில் உள்ளது. இந்நிலையில் அதில் ஜோடியாக நடித்துள்ள விரல் நடிகரும், புஸு புஸு நடிகையும் காதலை முறித்துக் கொண்டு ஆளாளுக்கு முறைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கிடையே படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்த தயாரிப்பாளர் திட்டமிட்டாராம்.
ஆனால் விரல் நடிகரும், புஸு புஸு நடிகையும் எலியும், பூனையுமாகிவிட்டதால் பாடல் வெளியீட்டு விழாவை சத்தமில்லாமல் நடத்திவிட்டார் தயாரிப்பாளர். பட பாடல்களை பிரபலமாக்க எஃப்.எம். ரேடியோவினர் பேட்டி கேட்டுள்ளனர். உடனே தயாரிப்பாளர் ஹீரோவிடம் அபாயின்ட்மென்ட் வாங்கிக் கொடுத்துள்ளார்.
இதையடுத்து எஃப்.எம். ரேடியோ ஆட்களும் நடிகரை பேட்டி காண அவரது வீட்டுக்கு சென்றுள்ளனர். ஆனால் அவர்களை தடுத்து நிறுத்திய காவலாளி நடிகருக்கு இப்போது பேட்டி கொடுக்க மூடு இல்லை போயிட்டு வாங்க என்று தெரிவித்துள்ளார்.
பேட்டி காண சென்றவர்கள் காவலாளியின் பேச்சைக் கேட்டு திரும்பியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











