கைவிட்ட நடிகர்.. புலம்பும் இயக்குநர்!
கிண்டலுக்கு இன்னொரு தமிழ்ப் பெயரைச் சூட்டி படமெடுத்த இயக்குநருக்கும் ஹீரோவுக்கும் இப்போது ஏழாம் பொருத்தம் ஆகிவிட்டது.
அந்தப் படத்தின் படப்பிடிப்பின்போது, எனக்கு உங்களை ரொம்ப புடிச்சிடுச்சி. இந்தப் படம் முடிஞ்சதும் மீண்டும் நாம இன்னொரு படம் பண்ணலாம். கதை ரெடி பண்ணுங்க, என்றாராம்.
இதை நம்பி, அவருக்கேற்ற இன்னொரு கதையையும் தயார் செய்துள்ளார் இயக்குநர்.
ஆனால் இருவரும் இணைந்த முதல் படம் மகா தோல்விப் படமாக முடிந்தது. தொடர்ந்து தோல்விப் படம் கொடுத்த அந்த ஹீரோவுக்கு இது மிகப் பெரிய சறுக்கலாகவும் அமைந்தது.
இதனால் கடுப்பான நடிகர், இயக்குநரிடம் பேசுவதையே நிறுத்திக் கொண்டாராம். அந்த இரண்டாவது பட வாய்ப்பையும் மறுத்துவிட்டாராம்.
இயக்குநர் இப்போது புலம்பிக் கொண்டிருக்கிறார்!
Comments


Click it and Unblock the Notifications