வசியம் வைத்த வாரிசு நடிகை.. பேபி நடிகைக்கு பாயாசம் தான் போல.. ஸ்டைல் நடிகர் மனசே மாறிடுச்சாம்?
சென்னை: பிரம்மாண்ட தயாரிப்பில் ஸ்டைல் நடிகர் நடிக்கப் போகும் புதிய படத்தில் ஹீரோயினாக யாரை போடுவது என்கிற குழப்பம் பெரிதளவில் ஏற்பட்டு இருப்பதாக கூறுகின்றனர். பிரம்மாண்ட இயக்குநர் இயக்கத்தில் நடித்து வரும் அந்த ஹாலிவுட்டுக்கு போன பாப்பாவை புக் செய்ய நினைத்த இயக்குநருக்கு கடைசி நேரத்தில் அல்வா கிடைத்துவிட அடுத்த ஹீரோயினை தேடி வருகிறாராம்.
இப்போ தும்முனா தான் உண்டு என்கிற ரீதியில் சரியான நேரத்தில் காய் நகர்த்திய பேபி நடிகைக்கு இயக்குநர் க்ரீன் சிக்னல் கொடுத்தாலும் ஹீரோ பச்சைக்கொடி காட்டவில்லை என்கின்றனர்.

அப்படி அவர் பண்ணாமல் இருக்க முக்கிய காரணமே அந்த வாரிசு நடிகை தான் என்றும் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களை தட்டித் தூக்கி வரும் அவர், பேபி நடிகைக்கும் தற்போது பாயாசத்தை போட்டுள்ளார் என்கின்றனர்.
கஷ்டப்படும் பேபி நடிகை: கையில் இருந்த பணத்தை எல்லாம் தேவையில்லாமல் பல இடத்தில் முதலீடு செய்து தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வரும் பேபி நடிகைக்கு புதிய பட வாய்ப்புகள் கிடைக்காத நிலையில், ரொம்பவே கஷ்டப்பட்டு வருவதாக கூடவே இருக்கும் நண்பர்களும் புலம்ப ஆரம்பித்துவிட்டனர். எப்படியாவது பழைய ஃபார்முக்கு வரவேண்டும் என நடிகை நினைத்தாலும் சினிமா வட்டாரம் அவரை முன்பு போல ஹீரோயினாக பார்க்க ரெடியாக இல்லை என்றே கூறுகின்றனர். சென்னை, மும்பை மற்றும் ஹைதராபாத் என டெய்லி ஒரு நகருக்கு சென்று ஏதாவது புதிய படத்தில் இணைந்து விட வேண்டும் என போராடி வருகிறாராம் நடிகை. ஆனால், சின்ன படங்கள் எல்லாம் வேண்டாம் என்றும் ஹீரோயின் சென்ட்ரிக் படங்களில் மூக்கு உடைந்தது போதும் என நினைக்கும் அவர் பெரிய நடிகர் படத்தைத் தான் தற்போது குறிவைத்திருப்பதாக கூறுகின்றனர்.
இயக்குநருக்கு ஓகே: ஏற்கனவே அந்த காப்பி இயக்குநர் இயக்கத்தில் பேபி நடிகை பெரிய படத்தில் நடித்த நிலையில், இந்த படத்தில் ஹாலிவுட் பாப்பா டாட்டா காட்டிவிட்டு சென்ற நிலையில், பேபி நடிகை எப்படியும் நாம் தான் ஹீரோயின் என பெருங்கனவுடன் இருக்கும் போது ஹீரோ நோ சொல்லிவிட்டார் என்கின்றனர்.
வசியம் வைத்த வாரிசு நடிகை: தெலுங்கில் உள்ள டாப் நடிகர்கள் படங்களில் அடுத்தடுத்து கமிட்டாகி வரும் அந்த வாரிசு நடிகை ஸ்டைல் நடிகருக்கும் வசியம் போட்டு அவரது படத்தில் நடிக்க வேண்டும் என்கிற முடிவை எடுத்துவிட்டார் என்கின்றனர். இதனால், காத்திருந்த பேபி நடிகைக்கு தற்போது ஏகப்பட்ட மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.
சமாதானப்படுத்திய இயக்குநர்: இந்த விஷயம் தெரிந்து கடுப்பாகி இயக்குநருக்கு கோபத்துடன் போன் அடித்த நடிகையை தற்போது இயக்குநர் ஒரே ஒரு விஷயம் சொல்லி கூல் செய்திருப்பதாக சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன. பேபிம்மா நீ ஒன்னும் கவலைப்படாத, நம்ம படத்துல கண்டிப்பா உனக்கு சான்ஸ் இருக்கு என்றும் ஹீரோவுக்கு மொத்தம் 3 நடிகைகள் ஹீரோயின் என்றும் புது அப்டேட்டை கொடுத்து பேபி நடிகையை சற்றே ஆசுவாசப்படுத்தி உள்ளார் என்கின்றனர். ஆனால், இன்னமும் பேபி நடிகைக்கு ஸ்டைல் நடிகர் சம்மதம் தெரிவிக்கவில்லை என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











