அந்த நடிகரை ‘கொத்து’ பரோட்டா ஆக்கியே தீரணும்.. திரைமறைவு வேலைகள் பார்க்கும் போட்டி நடிகர்!
காமெடி நடிகர் ஒருவர் தனது போட்டி நடிகரை காலி செய்ய வேலைகள் பார்த்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: தனக்குப் போட்டியாக வளர்ந்து வரும் காமெடி நடிகரை எப்படியும் வீழ்த்தி தனது பழைய இடத்தை மீண்டும் பிடித்தே ஆக வேண்டும் என திரைமறைவு வேலைகள் பல பார்த்து வருகிறாராம் அந்த பங்கு நடிகர்.
ஒரு சமயம் எல்லாப் படங்களிலுமே இந்த நடிகரின் காமெடி தான் தவறாமல் இடம் பெற்றிருந்தது. ஆனால், யாரும் எதிர்பார்க்காத விதமாக பரட்டைத் தலை காமெடி நடிகர் பிரபலமானார். அடுத்தடுத்து அவருக்கு கிடைத்த படவாய்ப்புகளும் அவரை தற்போது கதை நாயகன் வரை கொண்டு சென்றுள்ளது.

இதனால் தற்போது முன்னணி நடிகர்களின் படங்கள் எல்லாவற்றிலும் இந்த நடிகர் தான் இருக்கிறார். போட்டியை சமாளிக்க சம்பளத்திலும் அதிக கறார் காட்டுவதில்லையாம். பெரிய இயக்குநர்களின் படங்களில் குறைந்த சம்பளத்திலேயே நடிக்க சம்மதம் சொல்லி விடுகிறாராம். இதன் பலன், கை நிறைய படங்கள்.
ஆனால், இந்த நடிகரின் அபரிமிதமான வளர்ச்சியால் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பது பங்கு நடிகர் தான். அவருக்குச் செல்ல வேண்டிய படங்கள் எல்லாம் தற்போது பரட்டை நடிகர் வசம் உள்ளது.
இதனால் மீண்டும் தான் விட்ட இடத்தை திரும்ப பிடிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளார் நடிகர். தன் பழைய கூட்டணி நண்பர்களையெல்லாம் வலியச் சென்று சந்தித்து வாய்ப்பு தேடும் படலத்தை முடுக்கி விட்டுள்ளாராம். எப்படியும் தனது போட்டி நடிகரை வீழ்த்தி மீண்டும் பழைய இடத்தை பிடித்தே தீருவது என திரை மறைவு வேலைகளில் இறங்கியுள்ளாராம் நடிகர்.


Click it and Unblock the Notifications











