பாடகியை கழட்டிவிட்டதே சரிதான் போலனு யோசிக்கும் நடிகர்.. நடிகரை விட குடும்பத்தினர் நிம்மதியாம்
சென்னை: தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஒருவர், சமீப காலமாக தனது காதல் வாழ்க்கை தொடர்பான விஷயங்களால் அதிகம் பேசப்பட்டு வருகிறாராம். குறிப்பாக பிரபல பாடகி ஒருவருடன் அவருக்கு இருந்ததாக கூறப்பட்ட நெருக்கம், கடந்த சில மாதங்களுக்கு முன்பு முடிவுக்கு வந்ததாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது அந்த முடிவு சரியானதுதான் என்ற மனநிலைக்கு நடிகரே வந்திருப்பதாக சினிமா வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.
அதாவது, இந்த நடிகரும் அந்த பாடகியும் பல ஆண்டுகளாக நெருக்கமாக பழகி வந்ததாக கூறப்பட்டது. இருவரும் பொதுநிகழ்ச்சிகளில் ஒன்றாக தோன்றியது, சமூக வலைதளங்களில் ஒருவரை ஒருவர் பாராட்டியது என பல சம்பவங்கள் காரணமாக காதல் வதந்திகளும் பரவின.
ஆனால் ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாகவும், அதன் பின்னர் அந்த உறவு இயல்பாகவே விலகி விட்டதாகவும் கூறப்படுகிறது. அப்போது இந்த முடிவால் நடிகர் மிகவும் வருத்தத்தில் இருந்ததாகவும், மீண்டும் சமரசம் ஏற்படுமா என்ற எதிர்பார்ப்பில் இருந்ததாகவும் பேச்சு அடிபட்டது.
இப்படி இருக்கையில், சமீபத்தில் நடந்த சில சம்பவங்கள்தான் நடிகரின் எண்ணத்தை முழுமையாக மாற்றியிருக்கிறதாம். குறிப்பாக பாடகி தரப்பில் இருந்து வந்த சில நடவடிக்கைகள் மற்றும் கருத்துகள் நடிகருக்கு நெருக்கமானவர்களை அதிருப்தியடைய வைத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நடிகரின் குடும்பத்தினர் ஆரம்பத்தில் இருந்தே இந்த உறவில் முழுமையான சம்மதத்துடன் இல்லை என்கிறார்கள். வெளியில் எதையும் காட்டிக் கொள்ளாமல் இருந்தாலும், இந்த உறவு முடிவுக்கு வந்த பிறகுதான் குடும்பத்தில் நிம்மதி திரும்பியுள்ளதாக நடிகரின் நெருங்கிய வட்டாரத்தில் பேசப்படுகிறதாம்.
மேலும், "அப்போது உணர்ச்சிவசப்பட்டு சில முடிவுகளை எடுத்திருந்தால் பெரிய சிக்கல் வந்திருக்கும்" என்ற கருத்தையும் குடும்பத்தினர் நடிகரிடம் அடிக்கடி கூறி வருகிறார்களாம். இதனால் நடிகரும் தற்போது நடந்ததை நினைத்து பார்த்து, "நடந்தது நல்லதுக்குத்தான்" என்ற மனநிலைக்கு மாறியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதுமட்டுமல்லாமல், தற்போது நடிகர் தனது முழு கவனத்தையும் சினிமா மற்றும் குடும்பத்தின் மீது திருப்பியிருப்பதாகவும், பழைய விஷயங்களை பற்றி அதிகம் பேச விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது.
இப்படி இருக்கையில், இந்த விவகாரம் மீண்டும் கோலிவுட் வட்டாரங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. குறிப்பாக, "அந்த உறவு தொடர்ந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்?" என்ற விவாதங்களும் சிலரிடையே நடைபெற்று வருகிறதாம்.
எது எப்படியோ... ஒருகாலத்தில் காதல் காரணமாக கவலையில் இருந்ததாக கூறப்பட்ட நடிகர், இன்று அதே உறவு முடிவுக்கு வந்ததை நினைத்து நிம்மதியாக இருப்பதாகவும், அவரை விட அவரது குடும்பத்தினர்தான் அதிக சந்தோஷத்தில் இருப்பதாகவும் கோலிவுட் கிசுகிசு வட்டாரங்கள் பரபரப்பாக பேசி வருகின்றன.


Click it and Unblock the Notifications