ஓ அது தான் விஷயமா.. நடிகர் ஓய்வு குறித்த வதந்தி.. இப்படியொரு உள்குத்து இருக்குதாம்!

சென்னை: அந்த திறமையான நடிகர் திடீரென சினிமாவை விட்டு ஓய்வெடுக்க உள்ளதாக வதந்திகள் பரவியதற்கு பின்னால், இப்படியொரு உள்குத்து காரணம் இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

உடலை வருத்தி நடிப்பதில் அந்த நடிகருக்கு நிகர் யாருமில்லை. அப்படிப்பட்ட நடிகர் திடீரென சினிமாவில் இருந்து விலகப் போவதாக வைரஸ் போல தகவல்கள் பரவின.

ஆன்லைன் போர்ட்டல் ஒன்று கிளப்பிய இந்த வதந்திக்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம் என சமூக வலைதளங்களிலும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

வாரிசு நடிகர்

வாரிசு நடிகர்

வாரிசு நடிகருக்கும் அப்பா நடிகருக்கும் இடையே சண்டையை மூட்டி விட, சமீபத்தில் இவர்களால் பாதிக்கப்பட்ட அந்த இயக்குநர் தரப்பு செய்த வேலை தான் இப்படியொரு வீண் வதந்தி வைரலாக காரணம் என்று கோலிவுட்டில் சிலர் கிசுகிசுக்கத் தொடங்கி உள்ளனர். அதனால் தான் வாரிசு நடிகரின் எதிர்காலத்திற்காக ஓய்வு என்ற வார்த்தையே கிளம்பியது என்றும் வாதிடுகின்றனர்.

நல்ல நண்பர்

நல்ல நண்பர்

அந்த விருது நடிகருக்கும், வாழ்க்கைத் தந்த இயக்குநருக்கும் இடையே பயங்கரமான நட்பு இன்றளவும் நிலவி வருகிறது. நிச்சயம் அவர் தரப்பில் இருந்து இப்படியொரு சர்ச்சை அதுவும் இந்த நேரத்தில் கிளம்பியிருக்காது என்றும், அப்படி அவர் பழி வாங்க நினைத்திருந்தால், பட ரிலீஸ் அப்பவே அதை செய்திருப்பார் என்கின்றனர் சிலர்.

உச்சத்தில் மார்க்கெட்

உச்சத்தில் மார்க்கெட்

அதுவும் அடுத்தடுத்து பெரிய பட்ஜெட் படங்களில் நடித்து வரும் அந்த நடிகரின் மார்க்கெட் ஏகத்துக்கு உச்சத்தில் இருக்கும் நிலையில், இப்படியொரு வதந்தி பரவ என்ன காரணம் இருக்கும் என்று சிந்தித்து சிந்தித்தே அந்த நடிகரின் ரசிகர்கள் தலையை பிய்த்துக் கொள்கின்றனர்.

திட்டித் தீர்த்தனர்

திட்டித் தீர்த்தனர்

அந்த நடிகர் குறித்த அப்படியொரு விஷயம் வைரலாக காரணமாக இருந்தவர்களை அவரது தீவிரமான ரசிகர்கள் எச்சரித்தும், திட்டித் தீர்த்தும் எக்கச்சக்க பதிவுகளை பதிவிட்டு டிரெண்ட் ஆக்கினர். சில ரசிகர்கள் கெட்ட கெட்ட வார்த்தைகளிலும், அவரது ஹேட்டர்களை திட்டித் தீர்த்தனர்.

கிளறி விட

கிளறி விட

இந்நிலையில், அந்த வைரஸ் குறித்து அந்த நடிகர் வாயே திறக்காமல் இருப்பதாகவும், நிவாரண நிதியாக எதுவுமே தராமல் மெளனம் காப்பதே, இந்த புதிய பூகம்பத்துக்கு காரணம் என்றும், சில நெருங்கி வட்டாரங்கள் கிசுகிசுக்கத் தொடங்கி உள்ளன. குடும்பத்தில் இருவர் சம்பாதித்து வரும் நிலையில், கொடுத்தால் என்னவாம் என்றும் சிலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டதே இப்படியொரு வதந்தி பரவ காரணம் என்கின்றனர்.

அவரவர் இஷ்டம்

அவரவர் இஷ்டம்

சத்தமில்லாமல் பல உதவிகளை செய்து வரும் அந்த நடிகர், இந்த விவாகரத்திலும் உதவிகளை செய்து வந்திருக்கலாம். ஆனால், எல்லாமே ஊடக வாயிலாக ரசிகர்களுக்கு தெரிந்தால் தான் பிரபலங்கள் கொடுத்ததாக கருதும் மனப்பான்மை தான் இப்படி தேவையற்ற வதந்திகள் பரவுவதற்கும், ரசிகர்கள் சண்டை ஏற்படுவதற்கும் காரணம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X