நடிகரின் பிக்கப் டிராப் பட்டியலில் புதிய நடிகை?
சென்னை: பிக்கப் டிராப் நடிகரின் பார்வை புஸு புஸு நடிகையின் மீது விழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
பிக்கப் டிராப் நடிகரின் பெயர் ஏற்கனவே ஒரு சில நடிகைகளுடன் சேர்ந்து அடிபடுகிறது. இந்நிலையில் அவரின் பார்வை தன்னுடன் இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்த புஸு புஸு நடிகையின் மீது பட்டுள்ளதாம். செட்டானால் நடிகையுடன் புகை மண்டலம் கிளம்ப கடலை போடுவார், பிக்கப் டிராப் செய்வார் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
புஸு புஸு நடிகையோ பிக்கப் டிராப்புடன் நெருக்கமாக ஒரு காட்சியில் நடித்துவிட்டு அய்யோ இதனால் என் இமேஜ் டேமேஜ் ஆகிவிடுமோ என்று கதறி அழுதார். இதையடுத்து நடிகை பெயருக்கு முன்னால் வெற்றியை வைத்திருக்கும் நடிகருடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தில் பிக்கப் டிராப் நடிகரும் கெஸ்ட் ரோலில் வருகிறாராம்.
அதற்காக படப்பிடிப்பு தளத்திற்கு வந்த நடிகரும், நடிகையும் பிரச்சனையை எல்லாம் மறந்து ஜாலியாக பேசிக் கொள்கிறார்களாம். ஏற்கனவே நடிகைக்கு வளர்ந்த நடிகர் மீது ஈர்ப்பு ஏற்பட்டுள்ளதாக வேறு செய்தி வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications










