அந்த நடிகையை விடாமல் டார்ச்சர் செய்யும் பிரபல நடிகர்.. காண்டான 2ம் மனைவி.. கச்சேரி இருக்கு?
சென்னை: அந்த ஆசை காரணமாக 2வது திருமணம் செய்த பின்னரும் இளம் நடிகையை விடாமல் டார்ச்சர் செய்து வருகிறாராம் அந்த பிரபல நடிகர் என்கிற அதிர்ச்சியான தகவல் சினிமா உலகையே ஷாக் ஆக்கி உள்ளது.
முதல் மனைவி இருக்கும் போதே சில நடிகைகளுடன் அப்படி இப்படி தொடர்பில் இருந்து வந்தவர் அந்த பிரபல நடிகர். அதை பொறுத்துக் கொள்ள முடியாமல் தான் நடிகையை அவரை விலகிச் சென்றார்.
ஆனால், 2வது திருமணம் முடிந்த நிலையிலும் இன்னமும் சினிமாவில் கவனம் செலுத்தாமல் காம போதையிலேயே அந்த நடிகர் இருந்து வருவது குடும்பத்தில் பெரிய புயலை கிளப்பி உள்ளது.

ஒன்னுக்கு ரெண்டு
அந்த பிரபல நடிகர் ஒன்னுக்கு ரெண்டு திருமணங்கள் செய்து இன்னமும் அந்த ஆசை அவரை விடவில்லை என்றே கூறுகின்றனர். சமீபத்தில் தனது படத்தில் நடித்த அந்த வடநாட்டு நடிகையுடன் வேறலெவல் ஜல்சாவில் ஈடுபட்டு வருகிறாராம் அந்த நடிகர். ஆரம்பத்தில் நடிகருடன் கும்மாளம் போட்ட நடிகை அவரது டார்ச்சர் தாங்க முடியாமல் விஷயத்தை வெளியே கசிய விட்டு விட்டாராம்.

டார்ச்சர் தாங்க முடியல
நடிகையை தொடர்ந்து வற்புறுத்தி வரும் நிலையில், அவர் இதற்கு மேலும், இவரது இம்சையை சகித்துக் கொள்ள முடியாது என்கிற முடிவுக்கு வந்த நிலையில், இந்த பிரச்சனையை நடிகரின் 2ம் மனைவியின் காதுக்கு செல்லும் படி பத்த வைத்து விட்டாராம்.

காண்டான செகண்ட் சேனல்
முதல் மனைவியை நடிகர் பிரிந்த நிலையில், அவரை ஆசையுடன் திருமணம் செய்து கொண்ட இரண்டாம் மனைவி இப்படியொரு விஷயத்தை கேட்டதுமே தனது கணவர் மீது உச்சகட்ட கோபத்தில் உள்ளாராம். எப்படி இந்த விஷயத்தை டீல் செய்வது என்கிற ஆலோசனையில் அவர் ஈடுபட்டு வருகிறாராம். கையும் களவுமாக பிடித்தால் மட்டுமே நடிகரை வெளுத்து வாங்க முடியும் என காத்துக் கொண்டு இருக்கிறாராம்.

கச்சேரி இருக்கு
சீக்கிரமே இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுக்கும் என்றும் நடிகருக்கு கச்சேரி இருக்கு என தகவல்கள் சினிமா வட்டாரத்தில் கசிந்து வருகிறது. பிரச்சனை பெரிதானால் இரண்டாவது மனைவியையும் அந்த நடிகர் விவாகரத்து செய்து விடுவாரா? என்கிற கேள்விகளும் கிளம்பி உள்ளன.


Click it and Unblock the Notifications











