பெண் வீட்டாரிடம் போட்டுக் கொடுத்து நடிகரின் திருமணத்தை நிறுத்திய நடிகை?
Recommended Video
சென்னை: தலைவர் நடிகரின் திருமணம் நின்று போக நடிகை ஒருவர் காரணம் என்று கூறப்படுகிறது.
எந்த தேர்தல் வந்தாலும் போட்டியிடுவார் என்று கலாய்க்கப்படும் நடிகருக்கும், அக்கட தேசத்து நடிகைக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இந்நிலையில் நடிகை தான் நடிகருடன் சேர்ந்து எடுத்த அனைத்து புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் இருந்து நீக்கிவிட்டார்.

அடுத்த மாதம் திருமணம் என்று நிச்சயிக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை எந்த வேலையையும் இரு வீட்டாரும் துவங்கவில்லையாம். இதனால் திருமணம் நின்றுவிட்டதாக பேசப்படுகிறது.
காதல் திருமணம் என்று கூறி, பிரமாண்டமாக நிச்சயதார்த்தம் நடந்த பிறகு இப்படியானதற்கு காரணம் தெரிய வந்துள்ளது. நடிகருக்கு ஆகாத பிரபல நடிகை ஒருவர் பெண் வீட்டாரை அணுகி அவரை பற்றி சில விஷயங்களை விவரமாக கூறினாராம்.
நடிகை தெரிவித்த அனைத்து விஷயங்களையும் பொறுமையாக கேட்ட பெண் வீட்டார் இந்த மாப்பிள்ளை வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டார்களாம். பிரபல நடிகை என்றதும் நடிகரின் முன்னாள் காதலி என்று நினைத்துவிட வேண்டாம். அவருக்கு இந்த விஷயத்தில் எந்த தொடர்பும் இல்லை.
அந்த பெண் அவர் உண்டு, அவர் படங்கள் உண்டு, சமூக சேவை உண்டு என்று இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











