சாரி சார்... காட் இயக்குநருக்கு ‘நோ’ சொன்ன பிரபல ஹீரோ

புதிய ஹீரோக்களின் வருகையால் வயதான ஹீரோக்கள் தங்கள் படம் குறித்து அதிக சிரத்தை எடுத்துக் கொள்ள வேண்டிய நிர்பந்தத்துக்கு தள்ளப் பட்டிருகிறார்களாம். அந்தவகையில், நடிப்பில் வித்தியாசம் காட்டி தேசிய விருது வாங்கிய கமலின் ராக்கெட் படத்தை தன் பேராகக் கொண்ட நடிகர் தனது திரையுலக எதிர்காலத்தை குறித்து அதிகமாகவே கவலைப்படுகிறாராம்.

சூப்பர்மேன் மாதிரி அடிக்கவேண்டும், மன்மதன் மாதிரி இருக்க வேண்டும், ரோமியோ மாதிரி காதலிக்க வேண்டும் அப்போது தான் ரியல் ஹீரோ என்ற இமேஜ்களை உடைத்து தற்போது வரும் வரும் புதிய நாயகர்கள் புதிய பாணியில் வித்தியாசம் காட்டி மக்களிடம் அப்லாஸ் வாங்கி விடுகிறார்கள்.

இதனால் வெள்ளித்திரையில் தனது அடுத்த கட்டம் குறித்து கவனமாக திட்டமிடுகிறாராம் நடிகர். அவரது சமீபத்திய படங்கள் எதுவும் சொல்லிக் கொள்கிற மாதிரி அமையவில்லை. பிரமாண்ட இயக்குநரின் படம் எடுக்க ஆரம்பித்து கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆகப் போகிறது ஆனால், வெளி வருவதற்கான சுவடுகளே இல்லை. இந்நிலையில் நாயகருக்கு முதல் ஹிட் கொடுத்த பா இயக்குநர் தனது அடுத்த படத்தில் நாயகனின் முடியை வெட்ட அனுமதி கேட்டு வந்தாராம்.

ஆனால், ஹீரோவோ 'திரும்ப உங்களுக்கு கால்ஷீட் கொடுத்த இன்னும் ரெண்டு வருஷத்துக்கு நா வேற படம் எதுவும் பண்ண முடியாது. அப்புறம் நா பீல்ட் அவுட் ஆகிடுவேன். சோ நம்ம கூட்டணி சரிப்பட்டு வராது' எனத் தெளிவாக பை பை சொல்லி அனுப்பி விட்டாராம் இயக்குநரை.

அதே கையோடு, இனி மூன்று மாதங்களுக்கு ஒரு படம் என புதிய ஷெட்யூல் போட்டு நடிக்கவும் நடிகர் முடிவு செய்திருக்கிறாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X