TRENDING ON ONEINDIA
-
ஒரே நேரத்தில் ஆலோசனை.. அமைச்சர்களுடன் முதல்வர்.. நிர்வாகிகளுடன் விஜயகாந்த்.. க்ளைமேக்ஸ் ரெடி?
-
சல்மான் கான் வழங்கிய 2 கோடி ரூபாய் காரை பயன்படுத்த மறுத்த தாய்... காரணம் தெரிந்தால் ஆச்சரியம் உறுதி
-
தரம் தாழ்ந்து போன ஸ்ரீ ரெட்டி: கண் கூசும் ஆபாச புகைப்படத்தை வெளியிட்டார்
-
எதிர்பார்த்த எல்லா இடத்துல இருந்தும் பணம் கிடைக்கப் போறது இந்த ஒரு ராசிக்காரருக்கு மட்டும்தான்...
-
2024: மும்பை - புனே வழித்தடத்தில் ஹைப்பர்லூப் போக்குவரத்து உறுதி.!
-
தெறிக்க விடும் மும்பை இந்தியன்ஸ் ட்ரைலர்.. ரோஹித், சச்சின், ஆகாஷ் அம்பானி மற்றும் பலர் நடிப்பில்!
-
குதிரைச் சாண அண்ணாசிப் பழம் 90,000 ரூபாயா..? அப்படி என்ன இருக்கு..!
-
பாதாமி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது
“அரசியல் கதையா இந்தா பிடி கால்ஷீட்”... பிரபல நடிகரின் ஷ்யூர் ஷாட் பிளான்!
சென்னை: அரசியல் கதையுடன் வருபவர்களுக்கு முன்னுரிமை தருகிறாராம் தமிழின் முன்னணி நடிகர் ஒருவர்.
தமிழ் சினிமாவில் பல்வேறு ஏற்றத்தாழ்வுகளைச் சந்தித்து, கொஞ்சம் கொஞ்சமாக வெற்றியை எட்டிப் பிடித்தவர் இந்த நடிகர். அவரது உழைப்பிற்கு கிடைத்த பலனாக தமிழ் சினிமா ரசிகர்கள் தற்போது அவரைக் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில வருடங்களாகவே நடிகருக்குள் அரசியல் ஆசை வருவதும், போவதுமாக இருக்கிறது. தனது படங்களிலும் பட்டும் படாமலும் அரசியல் பேசி வந்தவர், சமீபகாலமாக இறங்கி அடிக்க ஆரம்பித்திருக்கிறார்.
மகிழ்ச்சி:
அப்படிப்பட்ட படங்களுக்கு தன் ரசிகர்களிடையேயும் நல்ல வரவேற்பு இருப்பது அவரை மகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறது. ஆழம் பார்த்து விட்டு அரசியலில் காலைவிட திட்டம் தீட்டி வரும் அவர், சினிமாவை அதற்கு அடித்தளமாக்க திட்டமிட்டிருக்கிறார்.
அரசியல் நெடி:
இதனால் இனி வரும் தனது படங்களில் அரசியல் நெடியை கொஞ்சம் கூடுதலாகவே சேர்க்க இருக்கிறாராம் நடிகர். இதன் காரணமாக அரசியல் கதையுடன் வரும் இயக்குநர்களுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு தருகிறாராம்.
உடனடி கால்ஷீட்:
நடிகரின் வரவேற்பால் குஷியாகியுள்ள மூத்த மற்றும் இளம் இயக்குநர்கள், தங்களது பழைய அரசியல் கதைகளையெல்லாம் தூசி தட்டி நடிகரின் பார்வைக்கு கொண்டு செல்ல முடிவு செய்திருக்கிறார்களாம். கதை பிடித்திருந்தால் உடனடியாக கால்ஷீட் தருகிறாராம் நடிகர்.
மூத்த இயக்குநர்கள்:
இந்த நடிகரை இயக்கினால் நிச்சயம் மீண்டும் புகழ் வெளிச்சத்திற்குள் வந்துவிடலாம் என்பதால், நடிகருக்கு கதை சொல்வோர் வரிசையில் பல வெற்றிப்படங்களைக் கொடுத்த மூத்த இயக்குநர்களும் இருக்கிறார்கள். இளம் அல்ல மூத்த இயக்குநர் என்ற பாகுபாடில்லாமல் கதை பிடித்திருந்தால் கால்ஷீட் ரெடி என்கிறாராம் நடிகர்.