ஓவர் சீன் போட்டு, திமிராக பேசும் நடிகர்: தெறித்து ஓடும் தயாரிப்பாளர்கள்
சென்னை: காமெடி நடிகர் ஒருவருக்கு தலைக்கனம் ஏறிவிட்டதாம்.
இத்தனை நாட்களாக நகைச்சுவை கதாபாத்திரங்களில் ஓவராக பேசி காமெடி செய்து வந்த நடிகருக்கு ஹீரோவாகும் வாய்ப்பு கிடைத்தது. அதில் அவர் ஜெயித்தும் உள்ளார்.

இந்நிலையில் இனி நடித்தால் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று அடம் பிடிக்கிறாராம். யாராவது நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடிக்க அழைத்தால், யாரைப் பார்த்து என்ன வார்த்தை சொல்றீங்க என்று திமிராக கேட்கிறாராம்.
சரி சார், நீங்க ஆசைப்படுவது போன்றே ஹீரோ கதாபாத்திரம், கதை என்னவென்றால் என இயக்குநர் பேச ஆரம்பித்தால் அவரை அங்கேயே நிறுத்திவிடுகிறாராம். முதலில் சம்பளத்தை பேசி முடிப்போம், அதன் பிறகு கதையை கேட்கலாம் என்கிறாராம் நடிகர்.
இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் ஒரு தொகை சொன்னால், அதுக்கு நான் சும்மாவே இருந்துவிடுவேன் என்று கூறி பெரிய தொகையை கேட்கிறாராம். யோவ், நீ இன்னும் வளரவே இல்லை, அதற்குள் இம்புட்டு சீனா, காணாமல் போய்டுவ என்று தயாரிப்பாளர்கள் மனதிற்குள் அந்த நடிகரை திட்டிவிட்டு இடத்தை காலி செய்கிறார்களாம்.
நடிகர் போகும் போக்கை பார்த்தால் அவர் கெரியருக்கு அவரே ஆப்பு வைத்துக் கொள்வார் போன்று.


Click it and Unblock the Notifications











