மண்டியிட்ட இயக்குநர்.. அடங்கிய திமிர் பேச்சு.. அவர்கூட படமே வேணாமென முடிவு செய்த வாரிசு?

By Staff

சென்னை: படத்தின் ப்ரமோஷனுக்காக பல லட்சம் செலவு செய்து விழா நடத்தினால் கடைசியில் அந்த படத்துக்கே வேட்டு வைக்கும் அளவுக்கு அந்த இயக்குநரின் பேச்சு அமைந்து விட்டது.

முன்னாடி சைலன்ட்டாக இருந்து விட்டு தட்ட வேண்டிய இடத்தில் பாஸ் நடிகர் வெயிட்டாக தட்டிய நிலையில், பெரிய இடத்து வாரிசு இயக்குநரை கூப்பிட்டு செம டோஸ் விட்டுள்ளாராம்.

அதன் விளைவு தான் இப்படி மண்டியிட்டு அந்த இயக்குநர் தனது திமிர் பேச்சுக்கெல்லாம் தற்போது மன்னிப்பு கேட்டு எப்படியாவது படத்தை பார்க்க வாங்க.. என கூவி வரக் காரணம் என்கின்றனர். இதில், அந்த இயக்குநருக்கு இன்னுமொரு பெரிய சிக்கல் தற்போது ஏற்பட்டுள்ளது எனக் கூறுகின்றனர்.

Actor son and emerging actor plans to avoid controversial director movie

மண்டியிட்ட இயக்குநர்: பவர் கையில் கிடைத்து விட்டது என அதிகாரத்தை பயன்படுத்த ஆரம்பித்த அந்த இயக்குநரின் லீலைகளை படத்தின் நாயகனே போகிற போக்கில் லீக் செய்து விட்டு இயக்குநரை டோட்டலாக லாக் செய்து விட்டார்.

மேலும், பாஸ் நடிகரின் வீச்சும் ஹெவியாக கிளம்பிய நிலையில், வாரிசு இயக்குநரை தனியாக அழைத்துச் சென்று டோஸ் விட்டுள்ளாராம். அதன் பின்னர் தான் அந்த இயக்குநர் மண்டியிட்டார் என பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. ஆனால், இன்னொரு வாரிசு மூலமாக மீண்டும் ஒரு பிரச்சனையில் அந்த இயக்குநர் வசமாக சிக்கி விட்டாராம்.

அடிக்கு பயந்த வாரிசு: ஏற்கனவே ஒரு இயக்குநரிடம் அப்பா நடிகர் தனது வாரிசை ஹீரோவாக்க முயற்சி செய்து, அவரது டார்ச்சர் தாங்காமல் அந்த படத்தையே மாற்றி எடுக்க வைத்த அந்த வாரிசு நடிகர் இதுவரை அந்த இயக்குநருக்காக காத்திருந்த நிலையில், தற்போது, அப்பா எனக்கு அந்த இயக்குநரே வேண்டாம் என அடம்பிடித்து வருவதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

கஷ்டப்பட்டு நடிக்க ரெடி ஆனால், கண்டவனிடம் என்னால் அடி வாங்க எல்லாம் முடியாது அப்பா என்றே அந்த வாரிசு நடிகர் சொல்லி விட்டதாக அதிர்ச்சி தகவல்கள் சினிமா வட்டாரத்தில் அசைபோட தொடங்கி உள்ளன.

கைவிட்ட ஒல்லி நடிகர்: இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்து அந்த இயக்குநர் மீது சினிமா வட்டாரத்தில் பெரும் எதிர்ப்புகள் கிளம்பி வரும் நிலையில், அவருடன் மீண்டும் இணைய நினைத்த அந்த ஒல்லி நடிகரும் தற்போது மொத்தமாக டாட்டா காட்டி விட்டார் என்கின்றனர்.

"தீயினால் சுட்டப்புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு" என்கிற திருக்குறள் போல அந்த இயக்குநர் உணர்ச்சி வசப்பட்டு மைண்ட் வாய்ஸ்னு சத்தமாக பேசியது அடுத்தடுத்து அவருக்கு சினிமாவில் பெரும் சரிவை உண்டாக்கும் என கோடம்பாக்கத்தில் இப்பவே சிலர் ஆருடம் சொல்லத் தொடங்கி விட்டனர்.

ஆனால், தனது படைப்பின் மீது அந்த இயக்குநருக்கு உள்ள நம்பிக்கை, நிச்சயம் அந்த படம் ஹிட் அடித்து விட்டால், இந்த சர்ச்சை எல்லாம் காணாமல் போய் தனக்கான அங்கீகாரம் கிடைக்கும் என்கிற நம்பிக்கையுடன் இயக்குநர் பொறுமையாக உள்ளார் என்கின்றனர்.

சினிமாவில் வெற்றி, தோல்வி, சர்ச்சை, சந்தோஷம் எல்லாமே மாறி மாறி வரும் நிலையில், அந்த இயக்குநர் பெரிதாக கவலைப்பட தேவையில்லை என்றும் நலம் விரும்பிகள் ஆறுதல் கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X