அப்பா எல்லாம் உன்னால தான்.. அப்செட்டில் திட்டிய வாரிசு நடிகர்?
Recommended Video
சென்னை: வாரிசு நடிகரின் படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், படம் குறித்த எதிர்பார்ப்பு கொஞ்சம் கூட இல்லை என்பதை அறிந்து அப்செட்டில் இருக்கிறாராம் அந்த வாரிசு நடிகர்.
விளம்பரத்திற்காக பல இடங்களுக்கு சென்று பேட்டி கொடுத்து வந்தாலும், டிக்கெட் புக்கிங் முதல் நாள் கூட நிறையவில்லையே என்ற வேதனையில் வாடி வரும் அந்த நடிகருக்கு, எல்லாம் படம் வெளியான சரியாகிடும், மக்கள் தியேட்டருக்கு வருவார்கள் என அன்புள்ள அப்பா நடிகர் ஆறுதல் கூறியுள்ளாராம்.

ஆரம்பமே சொதப்பல்
எப்படியாவது தன்னுடைய வாரிசை ஹீரோ ஆக்கிவிட வேண்டும் என நினைத்த வி நடிகர், தனது குருநாதரின் படத்தில் அறிமுகம் செய்ய நினைத்தார். ஆனால், குரு நாதரோ அவரது பாணியில் படத்தை இயக்க, அந்த வாரிசுக்கு அது கொஞ்சமும் புடிக்கவில்லையாம். இதனால், தயாரிப்பு தரப்புக்கு திருப்தி இல்லை எனக் கூறி அந்த குரு இயக்குநரை ஓரங்கட்டினர். இப்படி வி நடிகரின் வாரிசுக்கு ஆரம்பமே சொதப்பலாக அமைந்தது.

ரிலீஸ் பிரச்சனை
எதிர்பார்த்தபடி, இன்னொரு இயக்குநரை வைத்து புதிதாக நாயகிகள் மற்றும் நடிகர்களை மாற்றி எடுக்கப்பட்ட அந்த படத்திற்கு, சரியான நேரத்தில் தணிக்கை சிக்கல் ஏற்பட, முன்பு சொன்ன தேதியில் படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டு மறுபடியும் படம் தள்ளிப் போனது.

பலத்த போட்டி
சாதாரணமாக சோலோவாக வந்தாலே அந்த வாரிசு நடிகரின் படம் ஓடுமா என்று தெரியாத நிலையில், ஐந்து அல்லது ஆறு படங்களுடன் அந்த வாரிசு நடிகரின் படம் மோதவுள்ளதாம். இதனால், அதிகளவில் தியேட்டர்கள் கிடைக்கவில்லை என்றும், வசூல் ரீதியாக பலத்த பாதிப்பு ஏற்படும் என்றும் அஞ்சுகின்றனர்.

அப்பாவுக்கே இல்லை
இப்படி எவ்வளவு விளம்பரப்படுத்தினாலும், படத்தின் மீது எதிர்பார்ப்பு வராததற்கு, அப்பாவுக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இல்லாததே காரணமாம். அவர் செய்த டார்ச்சரால் ஹீரோவாக ஆசைப்பட்ட வாரிசு நடிகர் தற்போது, எல்லாம் உன்னால தான் என திட்டியுள்ளதாக கோலிவுட்டில் பேசிக் கொள்கின்றனர்.


Click it and Unblock the Notifications











