இரண்டாவது படத்திலேயும் இரண்டு தடவை நடிக்கணுமாப்பா.. பயங்கர கடுப்பில் புலம்பும் வாரிசு நடிகர்!

சென்னை: இரண்டாவது படத்திலேயும் இரண்டு தடவை நடிக்க நேரிடுமோ என்கிற அச்சத்தில் வாரிசு நடிகர் புலம்பி வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன.

பெரிய இயக்குநர் இயக்கிய முதல் படத்தையே குறை சொல்லி விட்டு மீண்டும் ஒரு முறை நடித்தும் பெரிய ஃபிளாப் கொடுத்திருந்த அந்த வாரிசு நடிகருக்கு அடுத்த படத்திலும் அதே போன்றதொரு சூழ்நிலை உருவாகி உள்ளதாம்.

தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்து வரும் இயக்குநரின் சமீபத்திய தோல்வி தான் வாரிசு நடிகரை ரொம்பவே அப்செட் ஆக்கி உள்ளதாம்.

அறிமுகமே தோல்வி

அறிமுகமே தோல்வி

அப்பா பெரிய நடிகர் என்பதால் மிகப்பெரிய இயக்குநர் படத்தில் அறிமுகம் ஆக பிளான் பண்ணி மிகப்பெரிய ஹிட் அடித்த படத்தை ரீமேக் செய்து நடித்த அந்த வாரிசு நடிகருக்கு அறிமுக படமே மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்தது.

மாமா காலி

மாமா காலி

சொந்த மகனை போல நினைத்து அறிமுக படத்தை உருவாக்கிய அந்த பிரபல இயக்குநரின் சினிமா வாழ்க்கையையே முடிவுக்கு கொண்டு வரும் அளவுக்கு முதல் படத்திலேயே இயக்குநருக்கு எண்ட் கார்டு போடும் வேலையை அந்த வாரிசு நடிகர் சிறப்பாக செய்து முடித்து விட்டார்.

அப்பா துணையுடன்

அப்பா துணையுடன்

முதல் படம் படுதோல்வி அடைந்த நிலையில், அப்பாவின் கைகளை பிடித்துக் கொண்டு அடுத்த படத்தில் ஆவது வெற்றி நாயகனாக வலம் வரலாம் என நினைத்திருந்த அந்த இளம் ஹீரோவுக்கு சமீபத்தில் வெளியான இயக்குநரின் படம் மறுபடியும் அதே பழைய பயத்தை அளித்துள்ளதாம்.

இரண்டு தடவை நடிக்கணுமாப்பா

இரண்டு தடவை நடிக்கணுமாப்பா

முதல் படத்தை போலவே இரண்டாவது படமும் தன்னை திருப்தி படுத்தவில்லை என்றால் மீண்டும் இயக்குநர் மாற்றப்பட்டு இரண்டாவது முறை நடிக்கணுமாப்பா என பேச்சு வாக்கில் ஜாலியாக அந்த இளம் ஹீரோ உள்ளுக்குள் கஷ்டத்தை வைத்துக் கொண்டு பேசியதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கள் எழுந்து வருகின்றன.

அப்பா கண்டிஷன்

அப்பா கண்டிஷன்

இன்னமும் படத்தின் படப்பிடிப்பு முடியாத நிலையில், அந்த இயக்குநரை அழைத்து அப்பா நடிகர் திட்டவட்டமாக இந்த படம் வெற்றி அடைய வேண்டும், மீண்டும் சில காட்சிகளை மாற்றி அமைத்தால் கூட பரவாயில்லை. வெயிட்டான சில காட்சிகளையும் தாராளமாக சேர்த்து நல்லபடியாக படத்தை எடுத்துக் கொடுக்க வேண்டும் என கண்டிஷன் போட்டுள்ளாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X