பட ரிலீஸுக்கு முன்பு இமேஜை மோசமாக டேமேஜ் செய்து கொண்ட தலைவர்
Recommended Video

சென்னை: படம் ரிலீஸாக ஒரு வாரம் இருக்கும் நிலையில் தனது இமேஜை டேமேஜ் செய்து கொண்டுள்ளார் உச்ச நடிகர்.
உச்ச நடிகரின் புதுப்படம் அடுத்த வாரம் ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் வெளியான ட்ரெய்லரை மக்களை வெகுவாக கவர்ந்தது. அதிலும் குறிப்பாக அவர் போராட்டத்திற்காக மக்களை அழைத்த விதம் பிடித்திருந்தது.
படம் நல்லா இருக்கும்போல நிச்சயம் பார்க்க வேண்டும் என்று பலர் முடிவு செய்தனர்.

தூத்துக்குடி
ட்ரெய்லர் ரிலீஸாகி நல்ல விமர்சனம் எழுந்த கையோடு உச்ச நடிகர் தூத்துக்குடிக்கு கிளம்பிச் சென்றார். மக்கள் தன்னை பார்த்தால் மகிழ்ச்சி அடைவார்கள் என்று நினைத்து சென்ற அவரை பார்த்து ஒருவர் நீங்க யாரு என்று கேட்டுவிட்டார்.

நடிப்பா?
எதற்கெடுத்தாலும் போராட்டம் செய்தால் தமிழ்நாடே சுடுகாடாகிவிடும் என்று நடிகர் சொன்னது யாருக்கும் சுத்தமாக பிடிக்கவில்லை. படத்தில் போராட அழைப்பார் நிஜத்தில் அப்படியே மாற்றிப் பேசுகிறாரே என்று மக்கள் அவர் மீது அதிருப்தி அடைந்துள்ளனர்.

துப்பாக்கிச்சூடு
தூத்துக்குடியில் போராட்டக்காரர்கள் மத்தியில் சமூக விரோதிகள் ஊடுருவியதால் துப்பாக்கிச்சூடு நடந்தது என்று உச்ச நடிகர் கூறியது மக்களை கொந்தளிக்க வைத்துள்ளது. இவர் தூத்துக்குடிக்கு வந்து ஆறுதல் சொல்லவில்லை என்று யார் அழுதாவாம் என்று மக்கள் கேட்கிறார்கள்.

விளம்பரம்
படம் ரிலீஸாவதால் விளம்பரம் தேட உச்ச நடிகர் தூத்துக்குடி செல்கிறார் என்றார்கள். ஆனால் கிடைத்தது நெகட்டிவ் விளம்பரம் தான். மேலும் ஒரேயொரு பேட்டி கொடுத்து மொத்த இமேஜையும் டேமேஜ் செய்து கொண்டார் நடிகர்.


Click it and Unblock the Notifications









