லிப் டூ லிப் முத்தம்.. நடிகையுடன் காதல் சர்ச்சையில் சிக்கிய பிரபல இளம் நடிகர்!

ஒரேயொரு முத்தக்காட்சியால் நடிகையுடன் காதல் சர்ச்சையில் சிக்கியுள்ளார் பிரபல நடிகர் ஒருவர்.

சென்னை: பிரபல இளம் நடிகரும், அவருடன் இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்துள்ள நடிகையும் நிஜத்திலும் காதலித்து வருவதாக திரைத்துறையில் கிசுகிசுக்கின்றனர்.

ஒரே படத்தில் ஓஹோ என்ற வாழ்க்கை என்றால் அது நிச்சயமாக இந்த நடிகருக்குத் தான் பொருந்தும். ஒரே படம் மூலம் கன்னடம் மற்றும் தமிழ் சினிமாவில் தனக்கென ரசிகர் வட்டத்தை உருவாக்கி விட்டார்.

அடுத்தடுத்து இவர் நடித்த படங்களும் வெற்றியடைந்ததால் தற்போது முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருகிறார். படத்தில் அடல்ஸ் ஒன்லி காட்சிகளில் நடித்தபோதும் கூட, நிஜத்தில் இதுவரை அப்படியான சர்ச்சைகளில் அவர் சிக்கியதில்லை.

மீண்டும் ஜோடி:

மீண்டும் ஜோடி:

இந்நிலையில் தன்னுடன் இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்துள்ள நடிகையால் புது பிரச்சினையில் சிக்கியுள்ளார் நடிகர். சம்பந்தப்பட்ட நடிகையும், அவரும் காதலித்து வருவதாக பரபரப்பாக பேசப்படுகிறது. இப்படி ஒரு பேச்சு உருவாகக் காரணமே சமீபத்தில் வெளியான அவர்களது படத்தின் காட்சிகள் தான்.

லிப்லாக் காட்சி:

லிப்லாக் காட்சி:

அப்படத்தில் இருவரும் லிப்லாக் காட்சி ஒன்றில் நடித்துள்ளனர். நிஜத்தில் காதலிப்பதால் தான் தைரியமாக இப்படி ஒரு காட்சியில் இருவரும் நடித்தனர் என்கின்றனர். சம்பந்தப்பட்ட நடிகை ஏற்கனவே மற்றொரு நடிகருடன் நிச்சயதார்த்தம் வரை சென்றவர்.

நின்று போன திருமணம்:

நின்று போன திருமணம்:

பின்னர் ஒரு சில காரணங்களால் அவர்களது திருமணம் பாதியில் நின்றது. அப்போதே நடிகையின் திருமணம் நின்றதுக்கு காரணம் இந்த நடிகர் தான் எனக் கூறப்பட்டது. காரணம் அப்போது இந்த இளம் நடிகரும், நடிகையும் ஒரு படத்தில் சேர்ந்து நடித்து வந்தனர்.

அமைதியோ அமைதி:

அமைதியோ அமைதி:

பின்னர் சில காலம் இந்தப் பேச்சு இல்லாமல் இருந்தது. தற்போது மீண்டும் லிப்லாக் காட்சியால் இந்தக் காதல் பேச்சு கிளம்பியுள்ளது. வழக்கம்போல, இதற்கு மறுப்போ, விளக்கமோ தராமல் இருவரும் தங்களது பட வேலையில் பிசியாக இருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X