கருப்பு பணத்தை வெள்ளையாக்க தயாரிப்பாளர் ஆன ஹீரோ: வாரேவா
சென்னை: ஹீரோ ஒருவர் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்ததற்கு காரணம் வேறு உள்ளது என்கிறார்கள் விபரம் தெரிந்தவர்கள்.
திறமையான நடிகர் அவர். சினிமா பின்னணி இல்லாமல் நடிக்க வந்து தனது திறமையால் முன்னேறியுள்ளார். அவர் கோலிவுட்டில் நுழைந்தபோது பெரிய இடத்துப் பிள்ளை ஒருவர் அவருக்கு உதவி செய்தார். கஷ்டப்பட்டபோது எல்லாம் தனது திறமையை மட்டுமே நம்பி முன்னேற்றத்தை மனதில் வைத்து நடித்தார்.
வளர்ந்த பிறகு அவர் வழி தவறிப் போவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

படத் தேர்வு
மனசு கனமாக இருந்தால் அந்த நடிகரின் படத்தை பார்த்தால் நன்றாக சிரிக்கலாம் என்பார்கள் சினிமா ரசிகர்கள். ஆனால் தற்போது நடிகர் பிறரை விமர்சித்து வசனம் பேசுவதில் அதிக கவனம் செலுத்துகிறார். இந்த நடிகருக்கு ஏன் இந்த தேவையில்லாத வேலை என்று ரசிகர்கள் ஃபீல் பண்ணுகிறார்கள். நடிகரின் நடிப்பில் வெளியாகும் புதிய படங்களை முழுதாக பார்க்கவே தனி பொறுமை தேவைப்படுகிறது என்று தியேட்டருக்கு செல்பவர்கள் சொல்லும் அளவுக்கு நிலைமை உள்ளது.

காரணம்
தன்னுள் பல திறமைகளை வைத்துள்ள அந்த நடிகர் தயாரிப்பாளரும் கூட. அவர் படங்களை தயாரிக்க நல்ல கதைகளே காரணம் என்று அவரின் நெருங்கிய வட்டாரம் பெருமையாக கூறுகிறது. நடிகரும் தொடர்ந்து வித்தியாசமான படங்களாக தேர்வு செய்து தயாரித்து வருகிறார். இந்நிலையில் அவர் தயாரிப்பாளர் ஆனதற்கு வேறு காரணம் உள்ளது என்று விபரம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.

வெற்றி
நடிகரிடம் பணம் கொட்டிக் கிடக்கிறது. இந்நிலையில் கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றவே அவர் தயாரிப்பாளராக மாறியுள்ளார். மற்றபடி ஒரு மண்ணாங்கட்டி காரணமும் இல்லை என்று விபரம் தெரிந்த பெருசுகள் கூறுகிறார்கள். அப்படி என்றால் வெற்றி விழாக்கள் கொண்டாடியது எல்லாம் வெறும் பில்ட்அப் தானா கோப்ப்ப்பால்?

விமர்சனம்
நடிகர் நடிப்பில் அண்மையில் வெளியான படம் சரியாக ஓடவில்லை. அவர் தயாரித்த படத்திற்கும் பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை. நடிகர் கதைகளை தேர்வு செய்யும் முறையை மாற்ற வேண்டும். அப்படியே நாங்கள் எல்லாம் பெரிய அப்பாட்டக்கர் ஆகிவிட்டோம் என்ற நினைப்பை குப்பையில் போட வேண்டும் என்று விமர்சனம் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











