விரைவில் தேசிய கட்சியில் சேரும் 'தலைவர்' நடிகர்
Recommended Video
சென்னை: பிரபல நடிகர் ஒருவர் விரைவில் தேசிய கட்சி ஒன்றில் சேர உள்ளாராம்.
எந்த தேர்தல் நடந்தாலும் போட்டியிடுவார் என்று கிண்டல் செய்யப்படுபவர் அந்த நடிகர். தற்போது அவருக்கு நேரம் சரி இல்லை என்றே கூற வேண்டும். மனிதருக்கு பிரச்சனை மேல் பிரச்சனையாக உள்ளது.

கடும் நிதி பிரச்சனையில் சிக்கியுள்ளாராம் நடிகர். மக்களுக்கு சேவை செய்ய அரசியலுக்கு வருகிறேன் என்று அறிவித்தார். ஆனால் அறிவிப்பு வெளியிட்ட கையோடு அவரை பாடாய் படுத்தி எடுத்துவிட்டார்கள். இதையடுத்து அரசியல் விஷயத்தில் அடக்கி வாசித்து வருகிறார்.
இந்நிலையில் அதிகாரம் படைத்த தேசிய கட்சி ஒன்று தமிழகத்தில் பிரபலமான ஸ்டார் ஒருவரை தங்கள் பக்கம் இழுக்க விரும்பி நம்ம நடிகரை அணுகியுள்ளதாம். நடிகருடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். அவர் இருக்கும் நிலையில் நிச்சயம் அந்த கட்சியில் சேர்ந்து விடுவார் என்று கூறப்படுகிறது.
நடிகர் அந்த கட்சியில் சேர்வது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தகவல் அறிந்தவர்கள் தெரிவித்துள்ளனர். அந்த கட்சி வேறு ஒரு நடிகரை தான் தங்கள் பக்கம் இழுக்க முயற்சி செய்தது. பின்னர் அந்த வேலையை கிடப்பில் போட்டுவிட்டு இந்த நடிகரிடம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறது.
நடிகரை தமிழக அரசியல் கட்சி தலைவர் ஒருவர் ஏற்கனவே வறுத்தெடுக்கிறார். இந்நிலையில் அவர் அந்த கட்சியில் சேர்ந்துவிட்டால் அவ்வளவு தான் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











