»   »  என்னம்மா, இப்படி பண்றியேம்மா: மகளை கண்டித்த ஹீரோ

என்னம்மா, இப்படி பண்றியேம்மா: மகளை கண்டித்த ஹீரோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தனது மூத்த மகள் வெளிநாட்டுக்காரருடன் பொது இடங்களில் சுற்றி பெயரைக் கெடுத்துக் கொள்வது நடிகர் தந்தைக்கு பிடிக்கவில்லையாம்.

அந்த ஹீரோவின் 2 மகள்களும் ஹீரோயின்களாக நடித்து வருகிறார்கள். இதில் மூத்த மகள் வெளிநாட்டுக்காரரை காதலிப்பதாக அண்மையில் செய்திகள் வெளியாகின.

Actor unhappy with daughter's love?

வெளிநாடுக்காரரும், நடிகையும் ஜோடியாக வந்தபோது எடுத்த புகைப்படங்கள் வெளியாகின. இது ஹீரோவுக்கு பிடிக்கவில்லையாம். ஏம்மா, இப்படி காதலுருடன் ஊர் சுற்றி இமேஜை கெடுத்துக் கொள்கிறாய் என்று ஹீரோ தனது மகளிடம் தெரிவித்தாராம்.

காதலர் தினத்தை நடிகையுடன் கொண்டாட வெளிநாட்டுக்காரர் மும்பை வந்தார். நடிகை வெளிநாட்டிற்கு சென்ற இடத்தில் நண்பர்கள் மூலம் அவரை பார்த்து காதல் வயப்பட்டார் என்று கூறப்படுகிறது.

நடிகை தற்போது படம் இயக்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.

English summary
Buzz is that a senior actor is not happy with the way his daughter roaming around with her boyfriend in public.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil