நடிகை ரூம் போட்டு யோசித்து செய்வது நடிகருக்கு தானாக நடக்கிறதே!
சென்னை: நடிகை ஒருவர் டிரெண்டில் இருக்க வேண்டும் என்பதற்காக செய்யும் செயல் நடிகர் ஒருவருக்கு தானாக நடக்கிறது.
பிரபலமான நடிகை ஒருவர் அனைவரும் தன்னை பற்றியே எப்பொழுதும் பேச வேண்டும் என்பதற்காக ஏதாவது வதந்தியை கிளப்பிவிடுவார். இதை அவர் தான் செய்கிறார் என்று நம்பத்தகுந்த வட்டாரங்களே தெரிவித்துள்ளன.

இந்நிலையில் நடிகர் ஒருவர் பற்றி அடிக்கடி ஏதாவது வதந்தி கிளம்புகிறது. எவன் கிளப்பி விடுகிறான்னே தெரியவில்லையே என்கிறார் நடிகர். ஒரு வேலை அந்த நடிகையின் பாணியில் நடிகரும் செய்கிறாரோ என்ற சந்தேகம் எழாமலும் இல்லை.
இருப்பினும் தான் எந்த வதந்தியையும் கிளப்புவது இல்லை என்கிறார் நடிகர். நடிகை ரூம் போட்டு யோசித்து செய்யும் காரியம் நடிகருக்கு தானாக நடக்கிறது. எது எப்படியோ, நடிகர் பற்றி அனைவரும் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
டுப்ளிகேட் போடாமல் தெருவிலிறங்கி மக்களை சந்திப்பார் கம்பீர் என நம்புகிறோம்.. ஆம் ஆத்மி
நடிகரின் படங்கள் பற்றி மட்டும் அல்ல அவர் வாழ்வில் எட்டிப் பார்த்துவிட்டு ஓட்டம் பிடிக்கும் காதல் விவகாரங்கள் பற்றியும் அவ்வப்போது பேசப்படுகிறது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் அவரின் சங்க கால காதல் பற்றி எல்லாம் தற்போதும் கூட பேசுகிறார்கள்.
நான் மறந்தால் கூட இவங்க மறக்க மாட்டாங்க போலயே என்று ஃபீல் பண்ணுகிறார் நடிகர்.


Click it and Unblock the Notifications











