இயக்குநரின் பேச்சால் அப்செட்டான பெரிய இடத்து வாரிசு.. போட்ட கணக்கெல்லாம் பொசுக்குன்னு போயிடுச்சாம்!
சென்னை: ஏற்கனவே நடித்து வந்த ஒரு படத்தையே டீலில் விட்டு விட்டு அரசியல் பயணத்துக்காக தனது கடைசி படத்தை அந்த இயக்குநரிடம் கொடுத்த அந்த பெரிய இடத்து வாரிசு இயக்குநரின் சமீபத்திய பேச்சால் கிளம்பி உள்ள சர்ச்சை காரணமாக கடும் அப்செட் ஆகி உள்ளாராம்.
பிரபோகேண்டா படத்துக்கு தொடர்ந்து தமிழ் சினிமா ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்த படமும் அதே போன்ற பிரச்சார நெடியுள்ள படம் தான் என்பதை இயக்குநரின் பேச்சு பட்டவர்த்தனமாக்கி இருப்பதாக விமர்சனங்கள் கடுமையாக கிளம்பி உள்ளன.

படத்தை வாங்க வேண்டிய விநியோகஸ்தர்கள் பலருக்குமே இயக்குநரின் பேச்சு கடும் அதிருப்தியை கிளப்பிய நிலையில், படத்தின் பிசினஸ் கடுமையாக பாதிக்கும் சூழல் உருவாகி இருப்பதாக கூறுகின்றனர்.
இயக்குநரால் அப்செட்டான வாரிசு: பெரிய இடத்து வாரிசு தனது கடைசி படம் ஏழை பங்காளன் போல இருந்தால் தனது அரசியலுக்கான ஆதாயமாக இருக்குமே என அந்த இயக்குநரை தேர்வு செய்து நடித்த நிலையில், தற்போது கடைசியாக நடிகரின் கனவுக்கே வேட்டு வைக்கும் அளவுக்கு அந்த இயக்குநரின் சமீபத்திய பேச்சு மாறி இருப்பதாக சர்ச்சைகள் வெடித்துள்ளன.
இயக்குநரின் பேச்சு பெருவாரியான மக்களை படம் பார்க்கத் தூண்டும் விதமாக இருக்காமல், அவர்களை தியேட்டர் பக்கமே வராதபடி செய்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பாஸ் நடிகருக்கு மனசு கஷ்டம்: அந்த விழாவுக்கு சென்று வந்ததில் இருந்தே பாஸ் நடிகர் மனதளவில் பெரிய பாதிப்பை சந்தித்துள்ளதாகவும், பாஸ் நடிகரை சமாதானம் செய்ய பெரிய இடத்து வாரிசு முயற்சி செய்ததாகவும் பேச்சுக்கள் அடிபட்டுள்ளன.
இயக்குநரின் பேச்சு திரைத்துறையிலும் பெரும் அதிர்வலைகளை கிளப்பி உள்ளதாகவும், இரு பிரிவுகளாக ஏகப்பட்ட பிளவுகள் உருவாகி இருப்பது ஆரோக்கியமான விஷயம் அல்ல என்றும் பலரும் கருதி வருகின்றனர்.
விமர்சகர்களுக்கு ஜாக்பாட்: படம் வெளியானதுமே ஏகப்பட்ட நெகட்டிவ் விமர்சனங்கள் தான் குவியும் என்றும் அதனால் படத்திற்கு பொருளாதார ரீதியாக மிகப்பெரிய பாதிப்பு வரும் என நினைத்த வாரிசு யூடியூப் விமர்சகர்கள் பலருக்கும் அதிக தொகையை கொடுத்து வாயடைக்கும் முயற்சியில் இறங்கி உள்ளதாக கூறுகின்றனர்.
எப்படி இருந்தாலும், படம் வெளியாகி பாஸ் ஆகும் வரைக்கும் வாரிசு பதற்றமான மனநிலையில், தான் இருப்பார் என பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.


Click it and Unblock the Notifications











