»   »  நடிப்பில் இருந்து மீண்டும் கேமரா பக்கம் திரும்பும் நடிகர்?

நடிப்பில் இருந்து மீண்டும் கேமரா பக்கம் திரும்பும் நடிகர்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

கேமராமேனாக இருந்து ஹீரோவாக மாறியவர் அவர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அவர் ஆடிய சதுரங்க வேட்டையில் ஆடிப்போனார்கள் முன்னணி ஹீரோக்களே... ஆனால் அப்படி பெற்ற வெற்றியை தக்க வைக்க முடியாமல் சிரமப்படுகிறார்.

சமீபத்தில் அடுத்தடுத்து வெளியான இரண்டு படங்களுமே சரியான அடியாம். உதவும் மனப்பான்மை கொண்ட நடிகரிடம் இருந்து கார்ப்பரேட் கம்பெனி வேறு பணத்தைப் பிடுங்கி விட்டது என்கிறார்கள்.

இதனால் விரக்தியில் இருக்கும் அவர் நடிப்பில் இருந்து சில காலம் விலகி ஒளிப்பதிவு பக்கமே மீண்டும் சென்று விடலாமா என்று யோசிக்கிறாராம்.

அவருக்கு இன்னும் பெரிய ஒளிப்பதிவு வாய்ப்புகள் வந்துகொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Read more about: gossip, கிசுகிசு
English summary
That cameramen turned actor has decided to return to cinematography side again after continuous flops.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil