வான்டட்டாக வந்து வாய் கொடுத்து மாட்டிக் கொண்ட நடிகர்.. எல்லாம் அந்த விஷயத்தை மறைக்கத் தானாம்!
சென்னை: இருட்டில் இருந்து பல போராட்டங்களுக்கு பிறகு வெளியே வந்துள்ளேன் என மிக உருக்கமாக கடிதம் எழுதியுள்ள அந்த பிரபல நடிகர் வான்டட்டாக வந்து வாய் கொடுத்து மாட்டிக் கொண்டுள்ளார் என கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
Recommended Video
இவரு பக்கம் மட்டுமே நியாயம் இருப்பது போன்று அழகா ஜோடிச்சு பேசிட்டாரு, அவங்க மனைவி பக்கமும் விளக்கம் கேட்டாத்தான் இவருடைய சுயரூபம் தெரியும் என்றும் பேசத் தொடங்கியுள்ளனர்.
ஆனால், இதை எல்லாத்தையும் விட வேறு ஒரு ஸ்பெஷல் மேட்டரை மறைக்கத்தான் இந்த உருகுதல் டிராமா என்ற பேச்சும் அடிபட்டு வருகிறது.

மொக்கை காமெடி
அந்த சைக்கோ படம் இவருக்கு வாங்கிக் கொடுத்த பெயரையும் இவர் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. அதற்கு அடுத்தும் இவர் நடித்த மொக்கை காமெடி படம் எடுத்த எடுப்பிலேயே படு தோல்வியை சந்தித்தது. புதுசா ஒரு படமும் இவருக்கு கிடைக்கவில்லை.

தயாரிப்பாளர்கள் மீது பாய்ச்சல்
நடித்த படங்கள் ஏதும் சரியாக ஓடாமல் படுதோல்வியை சந்தித்த நிலையில், தனக்கான சம்பளத்தை சரியாக தயாரிப்பாளர்கள் தரவில்லை என்று அவர்கள் மீது பாய்ந்து, பின்னர் தன்னுடைய சொந்த கம்பேனியை தொடங்கினார் அந்த நடிகர்.

எல்லாம் நடிப்பு பாஸ்
தற்போது தன்னைப் பற்றிய உண்மையை உலகுக்கு கூறுகிறேன் என முதலை கண்ணீர் வடித்து எழுதியுள்ள கடிதம் எல்லாம் ஒரு நடிப்பு பாஸ் என்ற பேச்சுக்களும் அடிபட்டு வருகிறது.

மனைவியுடன் சண்டை
குடித்து விட்டு எப்போதும் மனைவியுடன் சண்டை போடுவதை வழக்கமாக கொண்டுள்ளார் அந்த நடிகர். இவரது டார்ச்சர் தாங்க முடியாமல் தான் அவரது மனைவியே இவரை விட்டு விலகிச் சென்றுள்ளாராம்.

இப்போ எதற்காக
தன்னை பற்றிய விஷயங்களை எடுத்துக் கூறி இப்போது அந்த நடிகர் சிம்பதி கிரியேட் செய்வதுக்கு எதற்காக தெரியுமா, எல்லாம் அந்த விளையாட்டு பெண்ணோடு புதுசாக ஆரம்பிக்கப் பட்ட உறவை புனிதப்படுத்தவும் அடுத்த படத்திற்கான புரொமோஷனுக்கான வேலை தானாம்.

அவங்க கிட்ட கேட்டாத்தான்
அந்த நடிகரின் மனைவியிடம் கேட்டாத் தான் இவர் சொல்வதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பது தெரியும் என்கின்றனர் கோலிவுட் வாசிகள். மேலும், குழந்தையை பிரிந்துவிட்டேன் என புலம்பும் இவர், மற்ற பெண்களுடன் எப்படி ஜாலியாக இருக்க முடியும் என்ற கேள்வியையும் முன் வைத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











