பழைய காதலியுடன் அப்படியொரு ஆட்டம்.. பிரதர் நடிகரின் மனைவிக்கு வந்ததே கோபம்.. அடுத்த கச்சேரியா?

By Staff

சென்னை: மில்க் பியூட்டி நடிகையுடன் பிரதர் நடிகர் காதலில் விழுந்த கதையெல்லாம் அந்த நேரத்திலேயே பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், அப்பாவின் கட்டளையால் காதலையே நடிகர் தூக்கி எறிந்து வேறு ஒரு பெண்ணை மணந்து கொண்டு பல ஆண்டுகள் எந்தவொரு பிரச்சனையுமின்றி வாழ்ந்து வருகிறார்.

Actor wife upset over ex lover reunion with her husband recently in a big event

ஆனால், திடீரென மீண்டும் அந்த நடிகையுடன் ஜோடி போட்டு நடிக்க வேண்டும் என்கிற ஆசை நடிகருக்கு வந்திருப்பதாகவும், சமீபத்தில் நடந்த விழாவில் அந்த நடிகையுடன் பிரதர் நடிகர் போட்ட அந்த டூயட் டான்ஸ் தான் தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பி இருப்பதாக கூறுகின்றனர்.

சோஷியல் மீடியாவிலேயே ரசிகர்கள் போட்டு பொளந்து வரும் நிலையில், நடிகரின் மனைவியும் அந்த கண்கொள்ளா காட்சிகளை பார்த்து பயங்கர கடுப்பாகி உள்ளாராம்.

அடுத்த அடுத்த படங்களில்: மிருகம் இயக்குநர் இயக்கிய படத்திலும் அந்த டிராவல் படத்திலும் அந்த நடிகையுடன் இணைந்து நடித்த போதே நடிகரும் நடிகையும் காதலில் விழுந்ததாகவும், திருமணம் வரை அவர்கள் உறவு சென்ற நிலையில், தந்தை தடுக்க திருமணம் தடைப்பட்டு காதலும் பிரேக்கப் ஆனது என்கின்றனர்.

இணையவே இல்லை: ஹிட் ஜோடியாக இரண்டு படங்கள் இணைந்து நடித்த அந்த சூப்பர் ஜோடி அதன் பின்னர் அந்த பிரச்சனை காரணமாக இணைந்தே நடிக்கவில்லை. திருமணத்துக்கு பின்னர், அந்த நடிகையுடன் இணைந்து நடித்தால் மனைவி மனசு கஷ்டப்படும் என்றே நடிகர் தவிர்த்து வந்த நிலையில், சமீபத்தில் நடிகரின் விழாவுக்கு திடீரென அந்த நடிகை வந்ததும் நடிகருடன் ஆட்டம் போட்டதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

ரகசிய ஒப்பந்தம்: அந்த மில்க் பியூட்டியுடன் மீண்டும் இணைந்து நடிக்க ரகசிய ஒப்பந்தம் ஒன்றையும் நடிகர் போட்டு இருப்பதாகவும், அதன் காரணமாகவே மீண்டும் நடிகரை நடிகை துரத்தி வருவதாகவும் கூறுகின்றனர். நடிகைக்கு தனியாக காதலர் ஒருவர் கிடைத்த நிலையிலும், நடிகருடன் ஒட்டி உரசுவது நடிகரின் மனைவிக்கு பிடிக்கவில்லை என்கின்றனர்.

மனைவி அப்செட்: மீண்டும் அந்த நடிகையுடன் பிரதர் நடிகர் இணைந்து ஆட்டம் பாட்டம் என கொண்டாட்டம் போட்டதை பார்த்த நடிகரின் மனைவியின் ஏஜென்ட்டுகள் நிகழ்ச்சி முழுவதும் அந்த நடிகருக்கும் நடிகைக்கும் இடையே நடந்த அத்தனை மேட்டர்களையும் ஒன்னுக்கு ரெண்டா போட்டுக் கொடுக்க மனைவி ரொம்பவெ அப்செட்டாகி நடிகருடன் பேசுவதையே தவிர்த்து வருகிறார் என்கின்றனர். மனைவியை எப்படி சமாளிப்பது என நடிகருக்கு நல்லாவே தெரியும் என்பதால் ஈஸியாக இந்த முறையும் ஏமாற்றி விடுவார் என்றே நெருங்கிய வட்டாரங்கள் கூறி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X